அயோத்தி + ராமேஸ்வரம்.. பக்கா பிளானோடு வந்த மோடி.. ராமநாதபுரத்தில் போட்டியிட முடிவு? ட்விஸ்ட்
ராமநாதபுரம்: லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதி - தமிழ்நாட்டில் ராமநாதபுரம் என்று இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய கட்சியாக உள்ளது. ஏன் உலக அளவில் அதிக தொண்டர்கள் கொண்ட கட்சியில் பாஜக ஒன்றாக உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் என்னவோ பாஜகவிற்கு பெரிய ஆதரவு இல்லை.

கடந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக சார்பாக ஒருவர் கூட எம்பியாக தேர்வாகவில்லை. அந்த அளவிற்கு பாஜகவிற்கு தமிழ்நாட்டில் பலம் இல்லாத சூழ்நிலை உள்ளது. பாஜகவிற்கு சில மாவட்டங்களில் சரியான பூத் கமிட்டி கூட இல்லாத நிலை உள்ளது.
பூத் கமிட்டியில் ஆள் போடுவதற்கு கூட உறுப்பினர்கள் இல்லாத சூழ்நிலை உள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும் பாஜக பெரிதாக வலுவாக இல்லை.
பாஜகவை தென்னிந்தியாவில் வலுப்படுத்தும் விதமாகவும், தமிழ்நாட்டில் பாஜகவின் கால் தடத்தை பதிக்கும் விதமாகவும் பிரதமர் மோடி சில திட்டங்களில் இறங்கி உள்ளாராம். தென்னிந்தியாவின் அரசியல் சூழ்நிலையை, முக்கியமாக தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையை மொத்தமாக மாற்ற வேண்டும் என்ற திட்டத்தில் பாஜக சில ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறதாம்.
தமிழ்நாடு போட்டி: 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் அல்லது மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்தது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் வாரணாசி, குஜராத்தில் உள்ள வதோதரா தொகுதிகளில் பிரதமர் மோடி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் பிரதமர் மோடி வெற்றிபெற்றார்.
அதன்பின் வதோதரா தொகுதியில் பிரதமர் மோடி எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தலில் தென் இந்தியாவில் கவனம் செலுத்த பாஜக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில்தான் 2024 லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆலோசனை செய்துள்ளார்.
ஆலோசனை: தென் மாநில பாஜக தலைவர்கள், பொதுச்செயலாளர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஜே.பி நட்டா இந்த திட்டத்தை தெரிவித்து அது தொடர்பாக நேற்று ஆலோசனை கேட்டு இருக்கிறார். . இதற்கு பெரும்பாலான தலைவர்கள், உடனடியாக ஆதரவு வழங்கி உள்ளனர். மோடி ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் மோடி எங்கே ராமநாதபுரத்தில் போட்டியிடுவாரோ என்று கேள்வி எழுந்துள்ளது.
ராமர் கோவில்: இப்படிப்பட்ட நிலையில்தான் ராமர் கோவிலை திறக்கும் முன் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வர முடிவு செய்துள்ளார். அவர் தனுஷ் கோடிக்கும் சென்றும் அங்கே பார்வையிட உள்ளார். இன்று பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வருகை புரிய உள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்கிறார். கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் இந்த பயணம் முழுக்க முழுக்க அயோத்தி விழாவை மனத்தில் வைத்து பிளான் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி 20ம் தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். அங்கே சிறப்பு பிரசாதம் அவர் வாங்கி வைப்பார். அதன் பின்னர், ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு பிரதமர் மோடி புனிதநீரை எடுத்துச் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இராமாயணத்தில் ராமர்.,. ராமேஸ்வரத்தில் உள்ள ராமர் பாலம் வழியாக இலங்கை சென்றதாக கதை உள்ளது.
இதனால் அங்கே உள்ள கடல் நீர் புனிதமாக கருதப்படுகிறது. அந்த கோவில் உள்ளே இருக்கும் தீர்த்தமும் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. இதைத்தான் மோடி எடுத்து செல்ல இருக்கிறாராம். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை மனதில் வைத்து இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
துறவிகள்: பொதுவாக இந்து துறவிகள், மத பயணம் மேற்கொள்பவர்கள் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், காசி, செல்வது வழக்கம். அதை பின்பற்றியே பிரதமர் மோடி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்றுவிட்டு அதன்பின் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லும் முடிவில் இருக்கிறார்.
இதனால் லோக் சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் ஒரு தொகுதி - தமிழ்நாட்டில் ராமநாதபுரம் என்று இரண்டு தொகுதிகளில் மோடி போட்டியிடும் திட்டத்தில் இருக்கிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்!












Click it and Unblock the Notifications