பேண்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன்.. திடீரென வெடித்து சிதறியதால் இளைஞர் பலி! ராமநாதபுரத்தில் ஷாக்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே டூவீலர் ஓட்டிச் செல்லும் போது திடீரென செல்போன் வெடித்துள்ளது. இதனால் திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இப்போது போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
இந்த நவீன காலத்தில் நம்மிடம் இருந்து பிரிக்கவே முடியாத ஒன்றாக செல்போன் இருக்கிறது. ஷாப்பிங் முதல் டேட்டிங் வரை அனைத்தையும் மொபைல் இரு்நதால் செய்ய முடியும் என்ற சூழலே உருவாகி இருக்கிறது.

கிட்டதட்ட நமக்கு 6ஆவது விரலாகவே செல்போன் மாறிவிட்டது என்றே சொல்லாலம். இதன் காரணமாகவே வெளியே செல்லும் போது நாம் பர்ஸ், ஐடி மறைந்தாலும் செல்போன்களை மறப்பதில்லை.
செல்போன்: நமது வாழ்க்கையை செல்போன்கள் மொத்தமாக புரட்டி போட்டு இருக்கிறது. முன்பு கற்பனையே செய்ய முடியாத விஷயங்களை சாத்தியமாக்கி இருக்கிறது. கடினமான பல விஷயங்களை எளிமையாக்கியுள்ளன. அதேநேரம் செல்போனால் சில பிரச்சினைகளும் கூட ஏற்படுகிறது என்பதை மறுக்க முடியாது. அப்படி தான் இப்போது இளைஞர் ஒருவரது உயிரை இந்தச் செல்போன் பறித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே ஓட்டப்பாலம் பகுதியை சேர்ந்த 36 வயது இளைஞர் தான் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இவர் நேற்றைய தினம் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர் பரம்பக்குடியில் இருந்து 2 சக்கர வாகனத்திலேயே மதுரைக்கு இருவரும் சென்றுள்ளனர். அங்கு வேலையை முடித்துக் கொண்டு மீண்டும் டூவிலரில் பரமக்குடிக்கு திரும்பி உள்ளனர்.
வெடித்து சிதறிய செல்போன்: அந்த 36 வயது இளைஞன் வழக்கம் போல தனது செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்து பயணித்துள்ளார். அவர்கள் டூவிலர் தெளிச்சாத்தநல்லூர் அருகே வந்த போது திடீரென செல்போன் வெடித்து சிதறி இருக்கிறது. திடீரென வாகனம் ஓட்டிக் கொண்டிருந்த போது பேன்ட் பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்து சிதறியதால் அவர்கள் நிலைதடுமாறி போனார்கள்.
அப்போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது. இதில் டூவிலரை ஓட்டி வந்த அந்த 36 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து வந்த மற்றொரு நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பிரதேச பரிசோதனை: உயிரிழந்த அந்த இளைஞரின் உடல் இப்போது பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போன் வெடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications