மோடி ராமநாதபுரம் வரட்டும் தம்பி! நான் யாருன்னு காட்டுறேன்! அன்பில் மகேஷிடம் ராஜகண்ணப்பன் விட்ட சவால்
ராமநாதபுரம்: பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டால் நான் யாருன்னு காட்டுகிறேன் பாருங்க என அமைச்சர் அன்பில் மகேஷிடம் அமைச்சர் ராஜகண்ணப்பன் தில்லாக சவால் விடுத்துள்ளார்.
காரில் ஒன்றாக வரும் போது தன்னிடம் ராஜகண்ணப்பன் இவ்வாறு தெரிவித்ததை பொதுக்கூட்டத்தில் பேசிய அன்பில் மகேஷ் கூறினார். கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியில் நடைபெற்றது.

அதில் பங்கேற்பதற்காக வந்த ராஜகண்ணப்பனும், அன்பில் மகேஷும் ஒரே காரில் வந்தனர். அப்போது ''என்னணே மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடப் போறதாக சொல்றாங்களே'', எப்படி எனக் கேட்டிருக்கிறார் அன்பில் மகேஷ். அதற்கு ''மோடி வரட்டும் தம்பி, ராஜகண்ணப்பன் என்றால் அவருக்கு யாருன்னு நான் காட்டுகிறேன்'' எனக் கூறியிருக்கிறார்.
இதனை மேடையில் பெருமையாக குறிப்பிட்டு பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், ராஜகண்ணப்பன் போன்றவர்கள் இருக்கும் வரை பிரதமர் மோடியே ராமநாதபுரத்தில் போட்டியிட்டாலும் தோல்வி மட்டுமே மிஞ்சும் எனக் கூறினார். அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் யாதவ சமுதாய மக்களிடையே மிகப் பெரும் செல்வாக்கு இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்படுகிறதே தவிர அது தொடர்பான எந்த உறுதியாக தகவலும் இதுவரை வெளியாகவில்லை. பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவது பற்றி தங்களுக்கு எந்த தகவலும் இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கூறியிருக்கிறார்.
இருப்பினும் தேர்தல் அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பதால் பிரதமர் மோடி ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.












Click it and Unblock the Notifications