"பாஜகவின் வேல் யாத்திரை".. ஸ்டாலின் ரொம்பவே பயந்துபோய் இருக்கிறார்.. எல்.முருகன் பேட்டி
வேல் யாத்திரை கண்டு ஸ்டாலின் பயந்துவிட்டார் என்று முருகன் கூறியுள்ளார்
ராமநாதபுரம்: பாஜகவின் வேல்யாத்திரையை கண்டு ஸ்டாலின் பயந்து போய் உள்ளார் என்று எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முருகன், "வாஜ்பாய் ஆட்சியில் தான் நாடாளுமன்றத்தில் முத்துராமலிங்க தேவருக்கு சிலை வைக்கப்பட்டது... ஆளுநர் 7.5% இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.. ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி... ஸ்டாலினின் ஆட்சி கனவு பலிக்காது... கனவு கலைந்துவிடும் என்பதால் ஆள் வைத்து பின்னால் இருந்து பேச வைக்கிறார்.
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது அவருடைய சொந்த விருப்பம்.. வந்தால் அதை வரவேற்போம்... தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்... பாஜகவின் வேல்யாத்திரையைக் கண்டு மு.க.ஸ்டாலின் பயந்துள்ளார்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications