சுடச்சுட மட்டன் பிரியாணி! சிக்கன் 65 + முட்டை! திக்குமுக்காடிய திமுக வாக்குச்சாவடி முகவர்கள்!
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டத்தில் பங்கேற்க வந்தவர்களுக்கு சுடச்சுட மட்டன் பிரியாணியும் அதற்கு தொட்டுக்கொள்ள சிக்கன் 65 மற்றும் முட்டை வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜகண்ணப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விருந்தில் சுமார் 20,000 பேருக்கு பிரியாணி வழங்கப்பட்டிருக்கிறது. டேபிள், நாற்காலி போட்டு அமரவைத்து பந்தி வைத்தால் ஆட்களும் போதாது, நேரமும் போதாது என்பதால் பஃப்பே முறையில் விருந்து பரிமாறப்பட்டது.

பிரியாணியை பொறுத்தவரை அன்லிமிடெட் முறையில் திமுக வாக்குச்சாவடி முகவர்களுக்கு வழங்கப்பட்டது. இதனால் பலரும் ஒன்ஸ் மோர் கேட்டு வாங்கிச்சாப்பிட்டனர். அதேபோல் 19 திமுா மாவட்டச் செயலாளர்களுக்கும், பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பாடம் எடுப்பவர்களுக்கும் தனியாக விருந்து பரிமாறப்பட்டது.
என்ன தான் இருந்தாலும் கடந்த முறை திருச்சியில் நடைபெற்ற டெல்டா மாவட்ட திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தின் போது அமைச்சர் நேரு கொடுத்த விருந்துக்கு இன்றைய விருந்து ஈடாகாது என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் அந்தளவு தாராளம் காட்டியிருந்தார் அமைச்சர் நேரு.
இன்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தில் இராமநாதபுரம், சிவகங்கை , திண்டுக்கல் கிழக்கு, திண்டுக்கல் மேற்கு, தேனி வடக்கு, தேனி தெற்கு, மதுரை மாநகர் , மதுரை வடக்கு, மதுரை தெற்கு விருதுநகர் வடக்கு, விருதுநகர் தெற்கு , திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மத்திய, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு , கன்னியாகுமரி மேற்கு என 19 மாவட்டங்களை சேர்ந்தோர் கலந்துகொண்டனர்.
மாலை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவுரை ஆற்றவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக டீ, காஃபி, சிற்றூண்டி வகைகளும் கொடுக்கப்படுகின்றன. அதேபோல் நோட், பேனா அடங்கிய ஆளுக்கொரு மஞ்சப்பையும் கொடுக்கப்பட்டிருந்தன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications