பாம்பன் பாலம் LIVE: எனக்கு அனுப்பும் கடிதங்களில் தமிழில் கையெழுத்திடுங்கள்- பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம்- மண்டபத்தை இணைக்கும் ரூ.550 கோடியில் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இதனையடுத்து புதிய பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில் சேவை தொடங்கியது

Pamban Bridge  Rameswaram  PM Modi

Apr 06, 2025, 3:24 pm IST

பாஜக நிறுவன நாள்

பாஜகவின் நிறுவன நாள்தான் இன்று. நான்கு தலைமுறைகளாக லட்சியத்துக்காக அனைத்தையும் இழந்துள்ளனர். பாஜகவினரின் கடினமான உழைப்பு அடங்கி இருக்கிறது; நல்லாட்சி வழங்குகிறது பாஜக- பிரதமர் மோடி
Apr 06, 2025, 3:22 pm IST

பாம்பன் பாலத்தை கட்டிய குஜராத்தி

100 ஆண்டுகளுக்கு முன்னர் பழைய பாம்பன் பாலத்தை கட்டியவர் ஒரு குஜராத்தி; 100 ஆண்டுகளுக்கு பின் புதிய பாம்பன் பாலத்தை திறப்பதும் இந்த குஜராத்திதான்- பிரதமர் மோடி
Apr 06, 2025, 3:20 pm IST

தமிழில் கையெழுத்து

தமிழக தலைவர்கள், கடிதங்களில் ஆங்கிலத்தில் கையெழுத்திடுகின்றனர்;தமிழில் கையெழுத்திடுங்கள்- பிரதமர் மோடி
Apr 06, 2025, 3:17 pm IST

தமிழ் மொழி மேம்பாடு

தமிழ் மொழி, மரபு அனைத்து இடங்களுக்கும் சென்று சேர மத்திய அரசு முயற்சிக்கிறது- பிரதமர் மோடி
Apr 06, 2025, 3:16 pm IST

மீனவர்களுக்காக மத்திய அரசு

மீனவர்களின் துயர காலங்களில் தோளோடு தோளாக நிற்கிறது மத்திய அரசு. 10 ஆண்டுகளில் மட்டும் 3700 மீனவர்கள், இலங்கையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். இவர்களிலேயே 600-க்கும் அதிகமானோர் ஓராண்டிலஏயே மீட்கப்பட்டுள்ளனர். தூக்கு மேடையில் நின்ற தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கையில் இருந்து மத்திய அரசுதான் மீட்டு வந்தது- பிரதமர் மோடி
Apr 06, 2025, 3:14 pm IST

மீன்வள திட்டங்கள்

பிரதமர் மீன்வள திட்டங்களின் கீழ் தமிழ்நாட்டுக்கு பல நூறு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி
Apr 06, 2025, 3:13 pm IST

மீன்வளத்துறைக்கு உதவி

மீன்வளத்துறை கட்டமைப்பை மேம்படுத்த தமிழ்நாட்டுக்கு தேவையான நிதியை மத்திய அரசு தந்து வருகிறது.
Apr 06, 2025, 3:11 pm IST

விவசாயிகளுக்கு ரூ12,000 கோடி

தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு சுமார் ரூ12,000 கோடி வழங்கப்பட்டுள்ளது.
Apr 06, 2025, 3:10 pm IST

தமிழில் மருத்துவ படிப்பு

தமிழில் மருத்துவ படிப்பை கொண்டுவர வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். ஏழை குழந்தைகளும் மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் படிக்க, நூல்களை தமிழில் தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும்
Apr 06, 2025, 3:08 pm IST

11 மருத்துவ கல்லூரிகள்

தமிழ்நாட்டுக்கு 10 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தந்துள்ளோம் - பிரதமர் மோடி
Apr 06, 2025, 3:07 pm IST

1400- மக்கள் மருந்தகங்கள்

தமிழ்நாட்டி மட்டும் 1,400 மக்கள் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 80% தள்ளுபடியில் மருந்துகள் கிடைக்கின்றன. இதன் மூலம் மக்களுக்கு ரூ700 கோடி சேமிப்பாகி உள்ளது- பிரதமர் மோடி
Apr 06, 2025, 3:05 pm IST

தரமான சிகிச்சைகள்

ஆயுஷ்மான் பாரதம் திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான சிகிச்சைகள் தமிழ்நாட்டில் அளிக்கப்பட்டுள்ளன.
Apr 06, 2025, 3:03 pm IST

சாதனை முதலீடுகள்

நாடு முழுவதும் 4 கோடிக்கும் அதிகமான கான்கிரீட் வீடுகள் ஏழைகளுக்கு கிடைத்துள்ளன; தமிழ்நாட்டில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கான்கிரீட் வீடுகள் ஏழைகளுக்கு கிடைத்துள்ளன- பிரதமர் மோடி
Apr 06, 2025, 3:01 pm IST

வேலைவாய்ப்புகள்

நாட்டின் இளைஞர்களுக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட்டு வருகின்றன.
Apr 06, 2025, 2:57 pm IST

தமிழ்நாட்டுக்கான மத்திய அரசு திட்டங்கள்

தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்களை பட்ட்யலிட்டு விவரித்தார் பிரதமர் மோடி
Apr 06, 2025, 2:57 pm IST

தமிழகத்துக்கு ரூ6,000 கோடி

10 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்துக்கு வெறும் 900 கோடி ரூபாய்தான் தரப்பட்டது; இந்த ஆண்டு ரயில்வே திட்டத்துக்கு ரூ.6,000 கோடிக்கும் அதிகமாக ஒதுக்கி உள்ளது- பிரதமர் மோடி
Apr 06, 2025, 2:55 pm IST

சிலர் அழுது கொண்டே இருக்கின்றனர்

மத்திய அரசு இவ்வளவு செய்தும் சிலர் (திமுக கூட்டணி) அழுது கொண்டே இருக்கின்றனர்; அவர்களால் அழத்தான் முடியும்; அவர்கள் அழுதுவிட்டு போகட்டும்
Apr 06, 2025, 2:54 pm IST

3 மடங்கு கூடுதல் நிதி

தமிழகத்தின் வலிமை உயர்ந்தால் இந்தியாவின் வளர்ச்சியும் விரைவாகும். 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு 2014-க்கு முன்னர் திமுக கூட்டணி ஆட்சியில் கொடுத்ததைவிட 3 மடங்கு கூடுதல் நிதியை மத்திய அரசு அளித்திருக்கிறது.
Apr 06, 2025, 2:51 pm IST

புல்லட் ரயில்

தேசத்தின் முதலாவது புல்லட் ரயில் திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெறுகின்றன- பிரதமர் மோடி
Apr 06, 2025, 2:49 pm IST

உயரமான ரயில் பாலம்

ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்; மும்பையில் மிக நீளமான கடல் பாலம் அமைத்துள்ளோம்- பிரதமர் மோடி
Apr 06, 2025, 2:48 pm IST

இரட்டிப்பான பொருளாதாரம்

10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் இரட்டிப்பாகி இருக்கிறது; இதற்கு காரணம் பல்வேறு கட்டமைப்புகளுக்கான நிதி ஒதுக்கீட்டை 6 மடங்கு உயர்த்தினோம்- பிரதமர் மோடி
Apr 06, 2025, 2:46 pm IST

எளிமையான பயணம்

பாம்பன் பாலம், பல லட்சம் பேரின் வாழ்க்கையில் தாக்கத்த்ஐ ஏற்படுத்தும்; பயணங்களை எளிமையாக்கும்- பிரதமர் மோடி
Apr 06, 2025, 2:44 pm IST

21-ம் நூற்றாண்டு பொறியியல் அற்புதம்

பாம்பன் புதிய ரயில்வே பாலம், 21-ம் நூற்றாண்டு பொறியியல் அற்புதம். இந்தியாவின் முதலாவது செங்குத்து தூக்கு கடல் பாலம்- பிரதமர் மோடி
Apr 06, 2025, 2:43 pm IST

அப்துல் கலாம் மண்

பாரத் ரத்னா கலாமின் பூமி; ஆன்மீகமும் அறிவியலும் குறித்து பேசியவர் கலாம்; பாம்பன் பாலம், தொழில் நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் இணைக்கிறது- பிரதமர் மோடி
Apr 06, 2025, 2:41 pm IST

ராமரின் ஆசிகள்

ராம நவமி நாளில் ராமேஸ்வரம் கோவிலில் வழிபட்ட போது ராமரின் ஆசிகள் கிடைத்தன- பிரதமர் மோடி
Apr 06, 2025, 2:40 pm IST

சங்க காலத்தில் ராமர்

தமிழகத்தின் சங்க கால இலக்கியத்திலும் ஶ்ரீ ராம பிரான் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. அனைத்து மக்களுக்கும் ராம நவமி வாழ்த்துகள்.
Apr 06, 2025, 2:38 pm IST

ஜெய் ஶ்ரீராம் என 3 முறை முழங்கிய மோடி

ராமநவமி குறித்து பஏசிய ஜெய் ஶ்ரீராம் என 3 முறை உரத்து முழங்கினார்.
Apr 06, 2025, 2:38 pm IST

ராம நவமியின் சிறப்புகள்

ராமநவமியின் சிறப்புகளை விவரித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.
Apr 06, 2025, 2:37 pm IST

தமிழக அமைச்சர்கள் பெயரை குறிப்பிடவில்லை

தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு ராஜ கண்னப்பன் பெயர்களை பிரதமர் மோடி குறிப்பிடவில்லை. ஆனால் மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், அஸ்விணி வைஷ்ணவ் பெயரை மட்டும் மோடி குறிப்பிட்டார்.
Apr 06, 2025, 2:36 pm IST

வணக்கம் அன்பு சொந்தங்களே

பிரதமர் மோடி தமது உரையின் தொடக்கத்தில் வணக்கம் எனது அன்பு சொந்தங்களே தமிழில் குறிப்பிட்டார்
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+