கடலில் வலையை விரித்த மீனவர் கண்ணன்.. மறு நொடியே பொக்கிஷம்.. குஷியில் ராமநாதபுரம்! இனி லட்சாதிபதிதான்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவருக்க்கு டன் கணக்கில் பாறை மீன்கள் சிக்கியுள்ளது. சற்றும் எதிர்பாராமல் கொத்தாக வலையில் சிக்கிய மீன்களால் மகிழ்ச்சி அடைந்த அந்த மீனவர், சக மீனவர்கள் உதவியுடன் அவற்றை கரைக்கு கொண்டு வந்துள்ளார். இந்த மீன்களின் மொத்த மதிப்பு 15 லட்சம் இருக்குமாம்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை அருகே உள்ள தொண்டி புதுக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். மீனவரான இவர் வழக்கம் போல தனது நாட்டுப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக பெரிய அளவிலான பாறை மீன்கள் அவரது வலையில் சிக்கியுள்ளது.

ஒரே வலையில் சிக்கிய 15 லட்சம்
இதனால், மகிழ்ச்சி அடைந்த மீனவர் கண்ணன், அருகில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்களையும் விரைவாக வருமாறு கூறினார். அவர்களும் அங்கு விரைந்த நிலையில், வலையில் சிக்கியிருந்த அனைத்து மீன்களையும் தொக்காக தூக்கி கரைக்கு கொண்டு வந்தனர் மீனவர்கள். 5 டன் எடை அளவுக்கு மீன்கள் மொத்தமாக கிடைத்த நிலையில், இந்த மீன்களின் மதிப்பு சுமார் 15 லட்சம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இதுபோன்ற மிகப்பெரிய அளவிலான பாறை மீன்கள் நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் சிக்குவது அரிதாக பார்க்கப்படுகிறது. ஆழ்கடலுக்கு விசைப்படகில் செல்லும் மீனவர்கள் வலையில் மட்டுமே சிக்கக்கூடிய இந்த பாறை மீன்கள் நாட்டுப்படகில் மீன் பிடிக்க சென்ற மீனவர் வலையில் சிக்கியது பலருக்கும் ஆச்சர்யத்தையும் வியப்பையும் அளித்தது.
நெட்டிசன்களும் பாராட்டு
இந்த மீன்களை கரைக்கு கொண்டு வந்துனர்.15 லட்சம் மதிப்புள்ள மீன்கள் சிக்கியுள்ள நிலையில் ஒரே நாளில் லட்சாதிபதியாகிவிட்டாரே என அப்பகுதி மீனவர்கள் பேசிக்கொண்டதை பார்க்க முடிகிறது. கடலுக்கு கஷ்டப்பட்டு மீன் பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நெட்டிசன்களும் பதிவிட்டு வருகிறார்கள்.
அரிய வகை கூறல் மீன்கள்
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராமநாதபுரம் மீனவர்கள் வலையில் அரிய வகை கூறல் மீன்கள் பிடிபட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது, பாம்பனில் மன்னா வளைகுடா கடற்பகுதியில் இருந்து கடந்த மார்ச் மாதம் மீன் பிடிக்க சென்ற மீனவர் ஒருவர் வலையில் 22 கிலோ மற்றும் 29 கிலோ எடை கொண்ட இரண்டு கூறல் மீன்கள் மாட்டின.
மொத்தமாக 51 கிலோ எடை கொண்ட இந்த மீன்கள் கிலோ ரூ.2,500 க்கு விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீன்களின் மொத்த விலை ரூ. 1,27,500- ஆகும். இந்த அரிய வகை கூறல் மீன்களை பொறுத்தவரை உணவுக்காக இதை பயன்படுத்துவது இல்லை. கூறல் மீனின் வயிற்று பகுதியில் ஒரு ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் காணப்படும். இதை மதுபானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய்களில் சுவைக்காகவும் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகவும் பயன்படுத்தப்படுவதாக சொல்லப்படுகிறது.
காற்றுப்பை ரப்பர் டியூப்
கூறல் மீன் குறித்து பாம்பன் மீனவர்கள் கூறியது:- "இந்த கூறல் மீனை உணவுக்காக பயன்படுத்துவதில்லை. கூறல் மீனின் வயிற்று பகுதியில் காற்றுப்பை ரப்பர் டியூப் போன்ற வடிவத்தில் (fish maws) நெட்டி காணப்படும். இந்த நெட்டியை பீர், ஒயின் போன்ற மது பானங்கள் மற்றும் ஜெல்லி மிட்டாய் போன்றவைகளில், சுவைக்காகவும், கெட்டு போகாமல் இருக்கவும் பயன்படுத்துகின்றனர். கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த நெட்டிகளைக் கொண்டு விலை உயர்ந்த சூப் தயாரிக்கப்படுகிறது" என்றனர்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications