ஒருத்தர் இல்ல! ரெண்டு பேரு! அண்ணன்- தம்பியுடன் உல்லாசம்.. பரோட்டா மாஸ்டரை கொல்ல மனைவி ஸ்கெட்ச்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: அண்ணன்- தம்பியுடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் அவர்களை கொண்டே கட்டிய கணவரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை ராமநாதபுரம் போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே சிங்கனேந்தலைச் சேர்ந்தவர் பிச்சைக்கனி (43). இவரது மனைவி சாந்தி (33). ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். இவர் பரோட்டா மாஸ்டராக வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த மே 25 ஆம் தேதி சொந்த ஊர் திரும்பினார். அந்த மாதம் 27ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து வெளியே சென்ற பிச்சைக்கனி, அதன் பின்னர் வீடு திரும்பவே இல்லை.

மனைவி சாந்தி

மனைவி சாந்தி

இதனால் பதறிய அவரது மனைவி சாந்தி, தனது கணவரை காணவில்லை என கண்ணீர் மல்க தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் பிச்சைக்கனியின் தந்தை குப்பு தனது மகன் கொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என புகார் கொடுத்தார்.

மருமகள் மீது சந்தேகம்

மருமகள் மீது சந்தேகம்

மேலும் தனது மருமகள் சாந்தி மீது சந்தேகம் உள்ளதாகவும் அந்த புகாரில் குப்பு தெரிவித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் பிச்சைக்கனியின் மனைவி சாந்தியிடம் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அவர் பல்வேறு தகவல்களை முன்னுக்கு பின் முரணாகவே பேசினார்.

செல்போன்

செல்போன்

இதையடுத்து அவருடைய செல்போனை வாங்கி அவர் யாருடன் பேசியிருக்கிறார் என்பதை போலீஸார் ஆய்வு செய்தனர். அதில் அவர் உறவினர்களான பார்த்திபன் மற்றும் அவரது தம்பி கலைமோகனுடன் அதிகம் பேசியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் தேவிப்பட்டினம் அருகே உள்ள சீனங்குடி கிராமத்தை சேர்ந்த கலைமோகன் (26) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

கள்ளத்தொடர்பு

கள்ளத்தொடர்பு

இதில் பார்த்திபன், கலைமோகனுடன் சாந்திக்கு கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. ஒரே நேரத்தில் அண்ணன், தம்பியுடன் உல்லாசமான வாழ்க்கையை அனுபவித்து வந்த சாந்தி, திடீரென அவரது கணவர் பிச்சைக்கனி வெளிநாட்டிலிருந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் தங்களது கள்ளக்காதலுக்கு அவர் நிச்சயம் இடையூறாக இருப்பார் என கருதினார்.

ரூ 50 ஆயிரம் பணம்

ரூ 50 ஆயிரம் பணம்

இதனால் கணவர் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு சம்பாதித்து கொண்டு வந்த பணத்தில் ரூ 50 ஆயிரத்தை கலைமோகனிடம் கொடுத்து பிச்சைக்கனியை கொலை செய்யுமாறு சாந்தி கூறியதாக தெரிகிறது. இதையடுத்து கடந்த மே 27 ஆம் தேதி பார்த்திபன், கலைமோகன் ஆகியோர் பிச்சைக்கனியை மது குடிக்க அழைத்து சென்று அரிவாளால் துண்டு துண்டாக வெட்டி அதை ஆள்நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

பிச்சைக்கனி உடல் துண்டுகள்

பிச்சைக்கனி உடல் துண்டுகள்

இதையடுத்து பிச்சைக்கனியின் உடல்களை போட்டதாக சொல்லப்படும் காட்டுப்பகுதிக்கு சென்ற போலீஸார் அங்கிருந்து எலும்புத் துண்டுகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய பார்த்திபன் கடந்த மே 30 ஆம் தேதி சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றது தெரியவந்தது.

மனைவி கைது

மனைவி கைது

இதையடுத்து கலைமோகனை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அந்தமான் தப்பி செல்வதற்காக மதுரை விமான நிலையம் அருகே தலைமறைவாக இருந்த சாந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பரோட்டா சுட்டு சம்பாதித்து கொண்டு மனைவி , பிள்ளைகளை பார்க்க ஆசையாய் வந்த பிச்சைக்கனி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+