என்னை 6 மாதம் தாசில்தார் ஆக்குங்கள்... கலெக்டரை திகைக்க வைத்த இளைஞர்
Recommended Video
ராமநாதபுரம்: திருவாடானை அருகே மங்களக்குடியில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில், இளைஞர் ஒருவர் தன்னை 6 மாதகாலத்திற்கு வட்டாட்சியராக நியமிக்க வேண்டும் என மனு அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவை திகைக்க வைத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மக்கள் குறைதீர்வு கூட்டங்களில் விநோதமான முறையில் சிலர் மனு அளிப்பது தொடர்கதையாக உள்ளது. ஏற்கனவே முதியவர் ஒருவர் பாட்மிண்டன் வீராங்கனை சிந்துவை மணம் முடிக்க மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என மனு அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்நிலையில் அந்த பரபரப்பு ஓய்வதற்குள் மீண்டும் அங்கு அதேபோல் ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

கீழ்குடி கிராமத்தை சேர்ந்த விநோத் என்ற இளைஞர், திருவாடானை வட்டாட்சியராக தன்னை 6 மாதத்திற்கு மாவட்ட ஆட்சியராக நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நியமித்தால் ஊழலை ஒழித்துக்காட்டுவேன் எனவும் மனு ஒன்றை தயார் செய்து அதை ஆட்சியர் வீர ராகவ ராவ் கையில் அளித்தார். அதை பிரித்துப் பார்த்த ஆட்சியருக்கு தலைசுற்றல் வராத குறைதான். சரி தம்பி செய்துவிடலாம் எனக் கூறி அந்த இளைஞரை அங்கிருந்து அனுப்பி வைத்தார்.

விநோத் அளித்த மனுவில், திருவாடானை தாலுக்காவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்சம் பெருவிகிவிட்டதாகவும், சான்றிதழ் பெறுதல், பட்டா மாற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்காக அரசு அலுவலர்கள் லஞ்சப் பணம் கேட்பதாகவும், இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதாகவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக விநோத்தை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, தனது தந்தை பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தனது பெயருக்கு மாற்ற ஒரு வருடமாக முயற்சி செய்து வருவதாக கூறினார். வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் பணத்தை எதிர்பார்த்து தன்னை அலைக்கழித்ததால், இதனை ஆட்சிரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் நோக்கில் தான் அந்த மனுவை அளித்ததாக தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications