தனுஷ்கோடி கடலில் வரலாறு காணாத மாற்றம்.. 10 கிமீ தூரத்திற்கு ஆச்சர்யம்.. சுற்றுலா பயணிகள் திகைப்பு
ராமநாதபுரம்: ராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் ஏற்பட்ட கடுமையான சீற்றம் காரணமாக எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.. இதனை சுற்றுலா பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். போட்டி போட்டு வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.
தமிழ்நாட்டின் தீவு நகரமான ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள கடல் பகுதி தனுஷ்கோடி.. பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள புயலால் அழிந்த கடல் பகுதியாகும். இது வங்கக் கடலும், இந்தியப் பெருங்கடலும் கூடுமிடமாக இருக்கிறது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக நம்பிக்கை நிலவுகிறது. வில்லைப் போன்று வளைந்த கடற்கரையைக் கொண்டிருப்பதால் இதனைத் தனுஷ்கோடி என்று அழைக்கப்படுகிறது.

1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட பெரிய புயல் கரையை கடந்த போது இராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே அன்று கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும், பாம்பனையும் இணைத்த ரயில் பாதையும், அப்போது சென்ற ரயிலும் மொத்தமாக புயலால் அழிக்கப்பட்டது. இந்த புயலில் ரயிலில் சென்ற 123 பேர் மற்றும் தனுஷ்கோடியில் இருந்த சுமார் 2000 பேர் மாண்டுபோனார்கள். அதன் பின்னர் தமிழக அரசு தனுஷ்கோடியை வாழத் தகுதியற்ற நகரமாக அறிவித்தது.
தற்போது தனுஷ்கோடியில் சிதிலமடைந்த ஒரு தேவாலயமும், சில கட்டிடங்களும் மட்டுமே இருக்கிறது. ராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாக இருப்பதால் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகிறார்கள். இந்தியாவின் புகழ் பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் இருக்கிறது. ராமேஸ்வரத்தை ஒட்டியுள்ள தனுஷ்கோடிக்கு புதிய சாலை அமைக்கப்பட்ட பின்னர கடந்த சில வருடங்களாக சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற இடமாக தனுஷ்கோடி மாறி உள்ளது. ராமேஸ்வரம் வரும் அனைவரும் தனுஷ்கோடியும் வந்த செல்கிறார்கள்.. தனுஷ்கோடியை பொறுத்தவரை மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டு பார்க்கவே ரம்மியாக இருக்கும்..
அதேநேரம் தனுஷ்கோடி எவ்வளவு அழகானது அதைவிட அதிகமாக ஆபத்து நிறைந்த தீவு. அங்கு இயற்கையாகவே கடல் சீற்றம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று வழக்கத்திற்கு மாறாக கடல் சீற்றமாகவே இருந்தது. பகலில் கடல் சீற்றம் அதிகமாக இருந்த நிலையில், மாலையிலும் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் நீர் பொங்கியபடி கடற்கரை மணல் பரப்பை நோக்கி வந்த வண்ணம் இருந்தது. மாலை 5 மணிக்கு பிறகு எம்.ஆர்.சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழப்பட்டு காணப்பட்டது.
அதுபோல் கம்பிப்பாடு பகுதியில் இருந்து அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட தென்கடல் பகுதியில் கடல் சீற்றம் வழக்கத்தை விட மிக அதிகமாக இருந்ததால், கடல் நீரானது தடுப்புச் சுவரில் மோதி சாலை வரையிலும் வந்தது. இதை ஆச்சரியத்துடன் பார்த்த சுற்றுலா பயணிகள், செல்போனிலும் வீடியோ எடுத்தும் செல்ஃபி எடுத்தும் ரசித்தனர். அதேநேரம் கடலில் சீற்றம் ஏற்பட்டது தனுஷ்கோடி மீனவர்களை கவலையில் ஆழ்த்தியது. படகுகளை காப்பாற்ற நிறையவே போராட வேண்டியதிருந்தது. இதனிடையே 5 கிமீ தூரத்திற்கு கடலில் அலைகள் எழுவதால் சுற்றுலா பயணிகள் செல்ல இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications