சுழன்றடிக்கும் சூறாவளி.. ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அலர்ட்.. ப்ளீஸ் இந்த பகுதிகளுக்கு போகாதீங்க
ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடற்கரையையொட்டிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாண்டஸ் புயல் சென்னையையொட்டி கரையை கடந்த போது தமிழ்நாட்டின் கடலோர மாவட்டத்தில் கனமழை பெய்தது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.
அதேபோல பலத்த காற்று காரணமாக பழவேற்காடு தொடங்கி ராமேஸ்வரம் வரை படகுகள் சேதமடைந்திருந்தன. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.

சூறாவளி காற்று
இந்நிலையில், மழை குறைந்த நிலையில் மீண்டும் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல மீனவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் மீன்வளத்துறை இவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அனுமதி மறுத்துள்ளது. அதாவது குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது. இந்த பகுதிகளில் சில இடங்களில் காற்று மணிக்கு 55கி.மீ வேகத்தை எட்டும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டே மீன்வளத்துறை இந்த தடையை அறிவித்துள்ளது.

வானிலை நிலவரம்
தெற்கு வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை இலங்கையை நோக்கி நகரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். அதேபோல நாளையும் நாளை மறுநாளும்(23&24) இதே நிலைமை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்த அளவில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மீனவ கிராமங்கள்
வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்புக்கு ஏற்றார்போல் ராமேஸ்வரத்தின் கடல் கடந்த இரண்டு நாட்களாக கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் மீன கிராமங்களில் உள்ள குடியிருப்புகளுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. அதேபோல மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளதால் மீனவர்களுக்கு மீன்பிடி டோக்கன் வழங்கப்படவில்லை. எனவே கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு என 10க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கோரிக்கை
இதன் காரணமாக 5,000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள், 1,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன. இது குறித்து மீனவர்கள் கூறுகையில், மழை இருந்தால் கூட சமாளித்து விடலாம் ஆனால் இந்த சூறாவளிக் காற்றுதான் சமாளிக்க முடியவில்லை. காற்று காரணமாக படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி கடுமையாக சேதமடைகிறது. இவ்வாறு சேதமடைந்த படகுகளை சரி செய்து மீண்டும் கடலுக்குள் செல்ல நேரமும், பணமும் வீணாகிறது. எனவே சேதமடைந்த படகுகளை உடனடியாக ஆய்வு செய்து அதற்கான நிவாரண தொகையை உடனே வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை" என்று கூறியுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications