Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடுக்கடலில் தோன்றிய அதிசயம்.. தனுஷ்கோடி அரிச்சல் முனையில் வியந்து பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: தனுஷ்கோடி அருகே, கடல் நீரோட்டம் மற்றும் காற்று, சீற்றம் காரணமாக புதிதாக ஒரு மணல் திட்டு உருவாகியுள்ளது. புதிதாக கடலுக்கு நடுவே காணப்படும் இந்த மணல் திட்டு சுற்றுலாப் பயணிகளை வியக்க வைத்துள்ளது. வழக்கமாக காணப்படும் முதல் மணல் திட்டு அருகே மற்றொரு மணல் திட்டும் தற்போது தென்படுவதால், சுற்றுலா பயணிகள், தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்வதை காண முடிகிறது.

ராமேசுவரம் என்றாலே ஆன்மிக தலம் என்ற நிலை மாறி, தற்போது ஆன்மிகம் கலந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது. குறிப்பாக கடற்கரை சுற்றுலா, பாரம்பரிய சுற்றுலா, சூழல் சுற்றுலா என பல்வேறு வகைகளில் ராமேசுவரம் தீவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதனால் ராமேஸ்வரத்திற்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

sandbar-appeared-in-the-middle-of-the-sea-at-arichal-munai-in-dhanushkodi-tourists-are-amazed-to-s

ராமேஸ்வரம் கோவில்

இங்குள்ள ராமநாதசுவாமி கோவில், ராமர் பாதம், அக்னி தீர்த்த கடற்கரை, பாம்பன் பாலம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, நீர் பறவைகள் சரணாலயம் ஆகியவற்றை வந்து பார்த்து ரசித்து செல்ல வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் உள்ளது. ராமேஸ்வரம் என்றால் ஆன்மிக தலம் என்று அறியபட்ட நிலை மாறி தற்போது, ஆன்மிகம் கலந்த சுற்றுலா தலமாக மாறி வருகிறது.

மணல் திட்டுக்கள்

ஆண்டுக்கு 4 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பலரும் மறக்காமல் செல்லும் இடங்களில் ஒன்றாக தனுஷ்கோடி அரிச்சல் முனை உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அரிச்சல் முனை உள்ளது. இங்கு எப்போதும் கடல் சீற்றத்துடன் காணப்படும். தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னார் பகுதிக்கும் இடையில் மட்டும் சுமார் 13 மணல் திட்டுக்கள் உள்ளன. இதில் இந்திய கடல் எல்லைக்குள் 5 மணல் திட்டுக்கள் உள்ளன.

இந்த மணல் திட்டுக்களில் பகல் நேரங்களில் கடல் நீர் எதுவும் இல்லாமல், மணல் மேடுகளாக தெரியும். இரவில் கடல் சீற்றம், கொந்தளிப்பு காரணமாக மணல் திட்டுக்களை கடல் நீர் சூழ்ந்துவிடும். அரிச்சல் முனை கடற்கரை பகுதியில் இதை அடிக்கடி காண முடியும். தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரை சாலையில் இருந்து பார்த்தாலே நடுக்கடலில் உள்ள மணல் திட்டு நன்றாக தெரியும். இதனைக் காண சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் நின்றுவிட்டு செல்வார்கள்.

சுற்றுலா பயணிகள் வியப்பு

புதிய மணல் திட்டு அருகே, கடல் நீரோட்டம் மற்றும் காற்று, சீற்றம் காரணமாக புதிதாக ஒரு மணல் திட்டு உருவாகியுள்ளது. புதிதாக கடலுக்கு நடுவே காணப்படும் இந்த மணல் திட்டு சுற்றுலாப் பயணிகளை வியக்க வைத்துள்ளது. வழக்கமாக காணப்படும் முதல் மணல் திட்டு அருகே மற்றொரு மணல் திட்டும் தற்போது தென்படுவதால், சுற்றுலா பயணிகள், தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்வதை காண முடிகிறது.

மணல் திட்டுக்களில் மீனவர்களும் மீன்களை பிரித்தெடுப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருவதை பார்க்க முடிகிறது. இதனை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து செல்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரிச்சல்முனை அருகே கடலின் நடுவே புதிதாக உருவான மணல் திட்டு சில மாதங்களில் கடல் நீர் சூழ்ந்து மூழ்கியது. தற்போது புதிய மணல் திட்டு உருவாகியிருப்பது சுற்றுலாப் பயணிகளை வியக்க வைத்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+