முதல்வராக இருந்து முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி.. கொந்தளித்த சசிகலா
ராமநாதபுரம்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயரையே உச்சரிக்க விரும்பவில்லை என்று சசிகலா கொந்தளித்துள்ளார். எடப்பாடி பழனிசாமியை முதல்வராக அமர வைத்த என்னையே கட்சியில் இருந்து நீக்கினார்கள் என்று கூறிய சசிகலா, ஓபிஎஸ்க்கு அதிகரித்த நெருக்கடி காரணமாகவே முதல்வர் நாற்காலியில் அமர முடிவு எடுத்ததாக தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுள்ள சூழலில், இந்த கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக இணைந்திருக்கிறது. ஆனால் ஓபிஎஸ் மற்றும் சசிகலா இருவரையும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ள எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சசிகலா புதியக் கட்சியை தொடங்கப் போவதாக தகவல் வெளியாகி வந்தது.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு ராமநாதபுரத்தில் சசிகலா தரப்பில் பிரம்மாண்ட மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு அதிமுக கொடியுடன் இருந்த வேனில் சசிகலா வந்தார். இதன்பின் சசிகலா பேசுகையில், திமுகவின் வளர்ச்சிக்கு காரணமே எம்ஜிஆர் தான். இது அண்ணாவுக்கு நன்றாக தெரியும்.
ஆனால் அண்ணா மறைவுக்கு பின் எம்ஜிஆரை கட்சியில் இருந்து நீக்கினார் கருணாநிதி. அன்று எம்ஜிஆர் மன்றத்தில் இருந்தவர்கள் தான் திமுகவில் இருந்தார்கள். எம்ஜிஆருக்கு புதியக் கட்சி தொடங்க வேண்டும் என்ற எண்ணமே இல்லை.. அப்போது அனகாபுத்தூர் ராமலிங்கம் என்பவர் ஒரு கட்சியை பதிவு செய்து வைத்திருந்தார். அதிமுக என்பது எம்ஜிஆர் தொடங்கியது அல்ல.
அனகாபுத்தூர் ராமலிங்கம் கட்சியை எடுத்து எம்ஜிஆர் நடத்தினார். இதன்பின் ஜெயலலிதா அதிமுகவில் இணைந்து பணியாற்றினார். தொடர்ந்து எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதா தலைமையில் கட்சி செயல்பட்டது. ஜெயலலிதா மறைவுக்கு பின் எல்லோரும் என்னிடம் வந்து நீங்கள் தான் பொதுச்செயலாளராக வேண்டும் என்று கூறினார்கள். அப்போது நான் உங்களில் ஒருவரே இருந்து கொள்ளுங்கள் என்றேன்.
அவர்களாகவே என்னைப் பொதுச்செயலாளராக தேர்வு செய்து அதிமுக அலுவலகத்திற்கு அழைத்து சென்றார்கள். தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரையும் வரவழைத்தேன். ஓபிஎஸ் என்ன செய்கிறார் என்று கேட்டேன். சின்னச்சின்ன குறைகளை கூறினார்கள். ஓபிஎஸ் மீது எந்த தவறும் இல்லை. ஒரு கட்டத்தில் ஓபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
இந்த பிரச்சனையை வளரவிடக் கூடாது என்பதால், முதல்வராக வேண்டும் என்று நினைத்தேன். நான் கட்சியை மட்டும் பார்த்து கொள்ளலாம் என்று நினைத்தேன். இதனிடையே ஓபிஎஸ்க்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.. மெரினாவில் போய் உட்கார்ந்து தர்மயுத்தம் என்று சொல்லிவிட்டார். யார் சொல்வதையோ கேட்டு, இப்படி செய்துவிட்டார். அதுவே இன்று வரை அவருக்கு பிரச்சனையாக உள்ளது.
இதன் எங்கள் வழக்கின் தீர்ப்பில் 4 ஆண்டுகள் சிறை என்று அறிவிக்கப்பட்டது. உடனடியாக எம்எல்ஏ-க்களை அழைத்து பேசி "இப்போது இருக்கிறாரே".. அவரை முதல்வராக தேர்வு செய்தோம். எனக்கு பெயரை சொல்ல கூட விரும்பவில்லை.. எனக்கு வர மாட்டேங்குது.. நல்லவர்கள் என்றால் சொல்லலாம்.. இது சொல்ற அளவிற்கு இல்லை.
அப்போது அந்த நபர்.. நீங்களே கையெழுத்து வாங்கி நீங்களே ஆளுநரிடம் கொடுங்கள் என்றார்.. இதனை செய்து கொடுத்துவிட்டு பெங்களூர் சிறைக்கு சென்றேன்.. அங்கு சென்ற பின் செங்கோட்டையன் என்னை சென்னை சிறைக்கு மாறுங்கள் என்றார். இல்லை என்று மறுத்துவிட்டேன்.. ஒருவேளை நான் வந்திருந்தால், இப்போது உயிருடன் பேசி இருப்பேனா என்றே தெரியாது.
இதன்பின் என்னையே பொதுக்குழுவை கூட்டி நீக்கிவிட்டார்கள். அவரை முதல்வராக அமர வைத்த என்னையே தூக்கியெறிய தயாராகிவிட்டார். அதுமட்டுமல்லாமல் சிறையிலும் கொடுமைப்படுத்தினார்கள். கணவர் உடல்நிலை சரியில்லாத போது பரோல் கொடுக்கவே அவ்வளவு பிரச்சனை செய்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
லீமா ரோஸ் எனும் விஷ விதை.. பாஜக கண்ணை காட்டுனா போதும்! அதிமுக அவர் கையில்.. குண்டை போட்ட அதிமுக மாஜி -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா? -
தமிழக வெற்றிக் கழகத்தின் அஸ்திவாரத்தை அசைத்த சர்வே.. ஆசையா இருந்தாங்களே.. தவெக விஜய்க்கு ஷாக்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
திடீரென.. திமுக வேட்பாளர் காலில் விழுந்த அதிமுக வேட்பாளர்.. வேட்பு மனு தாக்கலின்போது ருசிகரம்! -
ஐசியூவில் இருந்த தேதிமுக.. உயிர் கொடுத்ததே அதிமுக தான்! புதுக்கோட்டையில் பொரிந்து தள்ளிய எடப்பாடி! -
55% வாக்கு இலக்கு.. விஜய் குறைத்து மதிப்பிடுகிறார்! டேட்டாவுடன் சொல்லும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
மதுரைக்குள் நுழைந்த சுந்தர் சி.. இதுக்காகத்தான் இங்கே வந்தேன்.. பிடிஆருக்கு சவால் விடறாரே? -
வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி வேறு -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்












Click it and Unblock the Notifications