"மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி" ராமநாதபுரத்தில் மீன் விற்பனை செய்ய தந்தைக்கு காரை பரிசாக கொடுத்த மகன்
ராமநாதபுரம்: தாயும் தந்தையும் வெயிலில் அவதிப்படாமல் மீன் வியாபாரம் செய்ய அவர்களுடைய மகன் காரை பரிசாக வாங்கிக் கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் அச்சந்தன் வயல் பகுதியைச் சேர்ந்த சிவானந்தம்- காளியம்மாள் தம்பதி. ஊருணி கண்மாய்களில் குத்தகைக்கு மீன் பிடித்து விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவர்களுக்கு சுரேஷ் கண்ணன் என்ற மகனும் 2 மகள்களும் உள்ளனர். சுரேஷ் கண்ணன் மரைன் என்ஜினியரிங் படித்துள்ளார். இவர் தற்போது வளைகுடா நாட்டை தலைமையிடமாக கொண்ட கப்பல் நிறுவனத்தில் மாதம் ரூ 2 லட்சம் ஊதியத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தான் சம்பாதித்து தனது இரு சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் சொந்தமாக வீட்டையும் கட்டியுள்ளார். சுரேஷ் கண்ணன் தாயையும் தந்தையையும் இந்த வேகாத வெயிலில் மீன் விற்பனைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் வயதான காலத்தில் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்குமாறும் கூறியுள்ளார்.

ஆனால் உழைத்து உழைத்து பழகி போன தம்பதிக்கு வீட்டில் உட்கார மனமில்லாமல் அந்த தம்பதி பாசமாக மறுப்பு தெரிவித்துவிட்டனர். எப்போதும் உழைத்து வாழ வேண்டும் என்றே விரும்பிய இவர்கல் கண்மாய் பகுதியில் இருந்து மீன்களை எடுத்து நகரில் உள்ள மீன் கடைகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார்கள்.
இதனால் தாய் தந்தை கஷ்டப்படாமல் இருக்க புதிதாக சொகுசு காரை வாங்கி பரிசளித்துள்ளார் சுரேஷ் கண்ணன். இதுகுறித்து சிவானந்தம் கூறுகையில் நாங்கள் மீன் பிடி தொழில் செய்து வருகிறோம். எங்கள் மகன் கார் வாங்கிக் கொடுத்துள்ளது பெருமையாக இருக்கிறது. நாங்கள் மீன் விற்பனை செய்து கஷ்டப்பட்டு படிக்க வைத்தோம். அவர் தற்போது எங்களுக்கு கார் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்த காரில்தான் மீன்களை எடுத்துச் சென்று விற்று வருகிறோம். எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார். இந்த காரில் விலை நிச்சயம் ரூ 10 லட்சத்திற்கு மேல் இருக்கும். இன்று சொத்துக்காக தாய் தந்தையரை வீட்டை விட்டு வெளியேற்றும் சில மகன்களுக்கு மத்தியில் மீன் வியாபாரத்திற்கு காரை வாங்கிக் கொடுத்து வைரமாக ஜொலிக்கிறார் சுரேஷ் கண்ணன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications