உப்பு தண்ணீர் குடித்து உயிர்வாழ தமிழகம் வந்த இலங்கை தம்பதி; மூதாட்டி பலி- கணவருக்கு சிகிச்சை
ராமநாதபுரம்: இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பசி, பட்டினியால் பாதிக்கப்பட்ட உப்பு தண்ணீர் குடித்து உயிர் பிழைக்க தனுஷ்கோடிக்கு வந்து மயங்கிய தம்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் அங்கு மூதாட்டி பலியானார். அவரது கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை சுதந்திர அடைந்த பிறகு அந்நாடு சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக இது உள்ளது. பெட்ரோல், டீசல், உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் வாழ வழியின்றி தவித்து வருகின்றனர்.

தமிழகத்துக்கு அகதிகள் வருகை
இந்நிலையில் தான் இலங்கையில் இருந்து ஏராளமான மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வருகின்றனர். அவ்வப்போது கடல் வழியாக இலங்கையில் இருந்து ஒன்று இரண்டு பேர் அகதிகளாக தமிழகம் வருவது தொடர்ந்து வருகிறது. இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மயங்கி கிடந்த முதிய தம்பதி
இந்நிலையில் கடந்த மாதம் (ஜூன்) 27 ம் தேதி தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் அருகே முதிய தம்பதி மயங்கிய நிலையில் கிடந்தனர். மரைன் போலீசார் சென்று உணவு, குடிநீர் வழங்கி மீட்டு விசாரித்தனர். அவர்கள் இலங்கை மன்னாரை சேர்ந்த பெரியண்ணன் (வயது 82 )பரமேஸ்வரி (வயது 70 ) என்பது தெரியவந்தது. இலங்கை பொருளாதார நெருக்கடியால் பசி, பட்டினியால் அவதிப்பட்ட தம்பதி தமிழகம் வந்தது தெரியவந்தது. மேலும் அவர்கள் உப்பு தண்ணீரை குடித்து கடல் வழியாக இலங்கையில் இருந்து தமிழகம் வந்ததும் தெரியவந்தது.

மூதாட்டி பலி
மேலும் அவர்கள் 2 பேரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பரமேஸ்வரி, மருத்துவமனையில் இறந்தார். அவரது கணவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

90க்கும் அதிகமானவர்கள் வருகை
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமா தமிழகத்துக்கு தொடர்ந்து அகதிகளாக இலங்கை மக்கள் வருகின்றனர். இவர்களுக்கு ராமேஸ்வர் அகதிகள் முகாமில் பாதுகாப்பு, உணவு வசதிகள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் 22ம் தேதிக்கு பிறகு மட்டும் தமிழகத்துக்கு இலங்கையில் இருந்து அகதிகளாக 90க்கும் அதிகமானவர்கள் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications