ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை பிடித்து சென்ற இலங்கை கடற்படை.. கச்சத்தீவு அருகே என்ன நடந்தது?
ராமநாதபுரம்: கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது. வாழ்வாதாரத்திற்காக கடலுக்கு செல்லும் மீனவர்களை படகுகளை பறிமுதல் செய்து, சிறையில் அடைத்து அவர்களின் வாழ்க்கையையே அழிக்கிறது இலங்கை கடற்படை. ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கைது செய்துள்ளது.
1974 மற்றும் 1976-ஆம் ஆண்டுகளில் இந்தியா மற்றும் இலங்கை இடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின்படி, கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதன் விளைவாக, இந்திய மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்த பல பகுதிகள் இலங்கையின் சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றன. எனினும் இந்திய மீனவர்கள் தங்களின் பாரம்பரிய உரிமை என்று கருதி அங்கு செல்கிறார்கள். ஆனால், இலங்கை அரசு அதைத் தங்கள் எல்லைக்குள் நடக்கும் அத்துமீறலாகக் கருதி கைது செய்கிறது.

இது ஒருபுறம் எனில், ராமேஸ்வரம் மீனவர்கள் பெரும்பாலும் விசைப்படகுகளைப் பயன்படுத்தி கடலின் அடிமட்டம் வரை வலைகளை வீசி மீன்பிடிக்கும் Bottom Trawling முறையைத் தொடர்கிறார்கள். இந்த முறை கடல் வளத்தை அழிப்பதாகக் கூறி இலங்கை அரசு 2017-ல் இதற்குத் தடை செய்துவிட்டது. அதனாலும் கைதுகள் நடக்கிறது. இதுஒருபுறம் எனில் இலங்கைத் தமிழ் மீனவர்களும் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இந்திய மீனவர்களின் சுருக்குமடி வலை மீன்பிடி முறைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
தற்போதைய நிலையில் இந்தியக் கடல் பகுதியில் அதிகப்படியான மீன்பிடித்தல் காரணமாக மீன் வளம் முற்றாக குறைந்துவிட்டது. இதனால், தரமான மற்றும் அதிகப்படியான மீன்களைப் பிடிக்க மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்கு செல்கிறார்கள். குறிப்பாக நெடுந்தீவு, மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்கிறார்கள். இதுவே கைது நடவடிக்கைக்கு காரணமாக உள்ளது.
இலங்கை கடற்படையின் இந்த நடவடிக்கையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சிக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனாலும், இந்த விவகாரத்தில் உரிய தீர்வுகள் எடுக்க வேண்டும் என்றால், சுருக்குமடி வலை ராமேஸ்வரம் மீனவர்கள் கைவிட வேண்டும் என்று இலங்கை தமிழ் மீனவர்கள் கூறுகிறார்கள். அதேபோல் தங்கள் கடல் வளத்தை ராமேஸ்வரம் மீனவர்கள் அழிப்பதை ஏற்க முடியாது என்று அவர்கள் குரல் எழுப்புகிறார்கள். இதனால் இருதரப்பு பேச்சில் இன்றுவரை முடிவுகள் வரவில்லை.
இப்படியான சூழலில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இன்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக மீனவர்கள் 10 பேரையும் கைது செய்தார்கள். மீனவர்களின் படகையும் இலங்கை கடற்படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் 10 பேரும் இலங்கை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்க உள்ளார்கள்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications