Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உசிலம்பட்டி ஓபிஎஸ்க்கு சிக்கியது "கரும்பு விவசாயி சின்னம்.." ராமநாதபுரம் தொகுதியில் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில், வாளி சின்னத்தை நான்கு ஒ பன்னீர் செல்வம் கேட்டிருந்த நிலையில் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதில், முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்துக்கு பலாப்பழம் சின்னமும், உசிலம்பட்டியை சேர்ந்த ஓ பன்னீர் செல்வத்துக்கு கரும்பு விவாசாயி சின்னமும் கிடைத்துள்ளது.

அதிமுகவில் தலைமை பதவியை கைப்பற்றுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுகவில் இருந்து ஓ பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். இதை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்தி கொண்டு இருக்கும் ஓ பன்னீர் செல்வத்திற்கு தொடர்ந்து பின்னடவுகளே ஏற்பட்டு வருகிறது.

Sugarcane farmer symbol allotted for Usilampatti O Panneerselvam in Ramanathapuram constituency


தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கியிருக்கும் ஓ பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். ராமாநாதபுரத்தில் ஓ பன்னீர் செல்வம் போட்டியிடும் நிலையில், அதே தொகுதியில் ஒ பன்னீர் செல்வம் என்ற பெயர் கொண்ட 5 வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்தை நாடினார். ஆனால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை ஒதுக்க மறுத்துவிட்டது. இரட்டை இலை அதிமுகவின் சின்னமாக இருக்கும் நிலையில் அந்த கட்சியும் தேர்தலில் போட்டியிட உள்ளதால் இரட்டை இலை ஓ பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்படவில்லை.

மேலும் கட்சிக்குள் உள்ள பிரச்சனை மற்றும் வழக்குகளை சுட்டிக்காட்டி அவர் தரப்பில் இரட்டை இலையை முடக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையையும் இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. இதையடுத்து ராமநாதபுரத்தில் போட்டியிடும் தனக்கு வாளி, திராட்சை, பலாப்பழம், பட்டாணி, கரும்பு விவசாயி ஆகியவற்றில் ஒன்றை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் ஓ பன்னீர் செல்வம் கேட்டிருந்தார்.

வாளி சின்னத்தை நான்கு ஒ பன்னீர் செல்வம் கேட்ட நிலையில் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுயேட்சையாக போட்டியிடும் உசிலம்பட்டியை சேர்ந்த ஒச்சப்பன் என்பவரது மகன் பன்னீர் செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

கரும்பு விவசாயி சின்னத்தை பெற சீமான் போராடிய நிலையில், பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில், கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி தமிழ்நாட்டில் 17 தொகுதிகளில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளது. மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்த ஆட்கள் கிடைக்காத காரணத்தால் போட்டியிடவில்லை என கட்சி தலைவர் ஜெயக்குமார் கூறியிருந்தார்.

அந்த வகையில், பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி போட்டியிடாத இடங்களில் கரும்பு விவசாயி சின்னம் சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக ஓ பன்னீர் செல்வம் போட்டியிடுவதால், அவருக்கு விழ வேண்டிய வாக்குகளை சிதறடிக்கும் நோக்கத்தில் சுயேட்சையாக அதே பெயர் கொண்ட வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டதாக சொல்லபடுகிறது. அதிமுகவே, இந்த சுயேட்சை வேட்பாளர்களை கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் தரப்பு குற்றம் சாட்டி வருகிறது.

எது எப்படியிருந்தாலும் அண்ணன் (ஓபிஎஸ்) வெற்றி பெறுவது உறுதி என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகிறார்கள். இருந்தாலும் பெயர் குழப்பம் காரணமாக ஓபிஎஸ்க்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் சிதறும் வாய்ப்பு இருப்பதாகவும் கடந்த கால தேர்தலில் அப்படியான சூழல் இருந்து இருப்பதாகவும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+