Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சின்னதாய் மாற்றி யோசித்ததால் நடந்த மேஜிக்.. ராமநாதபுரத்தையே பணம் தரும் ஏடிஎம்மாக மாற்றிய அதானி

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: வானம் பார்த்த பூமியான ராமநாதபுரம் மாவட்டத்தில் தண்ணீருக்கு பெரிய தட்டுப்பாடு உண்டு. அங்கு விவசாயமும் இல்லை.. தொழிலும் இல்லை...ஆனால் அங்கு போய் தொழில் செய்து கோடிகளை குவிக்கிறார் தொழில் அதிபர் அதானி.. சூரியன் சுல்லென்று அடிக்கும் பூமியில் சூரிய ஒளியை பணம் தரும் ஏடிஎம்மாக மாற்றியுள்ளது அதானி நிறுவனம்.

மழை இல்லை.. தண்ணீர் இல்லை...வெறும் பொட்டல் காட்டில் என்ன செய்ய முடியும் என்று குறைந்த விலைக்கு நிலங்களை விற்று ஊரை காலி செய்து பஞ்சம் பிழைக்க நகரங்களுக்கு மக்கள் ஓடி வருகிறார்கள். ஆனால் பணத்தை பெருக்க தெரிந்தவர்கள் எந்த சூழ்நிலையிலும் பணத்தை பெருக்குகிறார்கள். எந்த ஊரில் என்ன செய்தால் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை அறிந்தவர்களே வெற்றியாளர்கள் ஆகிறார்கள்..

 Sukra direction to Ramanathapuram: Adani turns solar into cash ATM in Kamudi

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிறப்பு உண்டு. அது பலருக்கும் தெரியும். அதேநேரம் அந்த ஊரில் என்ன செய்தால் பணம் ஈட்ட முடியும் என்பதை வெகுசிலரே அறிந்து கொள்கிறார்கள். தமிழ்நாட்டில் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஓடும் பெரிய நதி என்றால் வைகை மட்டுமே.. வைகை ஆற்று நீரை நம்பி விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார்கள் மக்கள்.

இங்கு விவசாயத்தை தவிர வேறு எதுவுமே இல்லை.. விருதுநகர் மாவட்டத்தின் சிறப்பு வெயில் தான். அங்கு வானம் பார்த்த பூமிகளாக இருந்த இடங்களில் பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் தீப்பட்டி தொழிற்சாலைகள் அதிகமாக உள்ளது.. திண்டுக்கல்லை பொறுத்தவரை பூட்டு தொழில் பிரத்யேகம் என்றாலும், தொழிற்சாலைகள் கணிசமாக உள்ளன. தேனியில் முப்போகம் விளையும் பூமி என்பதால் அங்கு விவசாயம் மட்டுமே உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை எதுவுமே இல்லை..

மதுரைப்பக்கம் வைகையை பார்த்து கடலில் கலக்காத ஒரே நதி வைகை என்று கிண்டலாக சொல்வார்கள். அப்படி கிண்டல் செய்ய காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தின் வறட்சி தான். எவ்வளவு வெள்ளம் வந்தாலும் ராமநாதபுரம் மாவட்டத்தினை தண்ணீர் தாண்ட முடியாத அளவிற்கு அங்கு வறட்சி இருக்கும் என்பதை கிண்டல் செய்வார்கள்.

ஆனால் அப்படிப்பட்ட பூமியில் சூரிய ஒளியை விற்று கோடிகளை குவித்து வருகிறது அதானி நிறுவனம். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 2500 ஏக்கர் பரப்பளவில் 648 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ள சோலார் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்துள்ளது. 2016ம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த மின் நிலையத்தில் தினம்தோறும் 30 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுவரை மொத்தம் 480 கோடி யூனிட் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு மேல் அதிக சூரிய ஒளி கிடைப்பதால் ஆண்டு முழுவதும் மின் உற்பத்தி அதிகமாக நடக்கிறது. குறிப்பாக மார்ச் முதல் மே வரை அதிக சூரிய ஒளி காரணமாக மின் உற்பத்தியும் அதிகமாக நடக்கிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் மூலம் 2.64 லட்சம் வீடுகளுக்கு மின்சாரத்தை விநியோகிக்க முடியும். இதன் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறது அதானி நிறுவனம்.இன்னும் சில நிறுவனங்கள் ராமநாதபுரத்தில் சூரிய ஒளி மின் உற்பத்தி மையங்கள் அமைக்க போகின்றன . வரும் காலத்தில் மின்சாரத்தில் தான் வாகனங்கள் ஓடப்போகும் நிலையில், ராமநாதபுரத்திற்கு சுக்கிர திசை தொடங்கி உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனங்கள் அதிகரித்ததால், தூத்துக்குடி போல் விரைவில் பொருளாதார மையமாக மாறும் வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+