ராமேஸ்வரம் கோவிலில் ஆலய நுழைவு போராட்டம்.. போலீசார் - பக்தர்கள் இடையே தள்ளுமுள்ளு! 200 பேர் கைது
ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உள்ளூர் பக்தர்கள் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் உள்ளூர் பொதுமக்கள் தரிசனம் செய்ய இருந்த சிறப்பு வழியை அடைத்து 200 ரூபாய் கட்டண வரிசையில் செல்ல திருக்கோயில் நிர்வாகம் அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் பொதுமக்கள் சார்பில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்றது.

ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை திருக்கோயிலின் மேற்கு கோபுர வாசல் முன் போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராகவும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் உள்ளூர் வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தினசரி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அதேபோல் உள்ளூர் பொதுமக்கள் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய ராமநாதசுவாமி சன்னதியின் வடக்கு புறத்தில் சிறப்பு வழி ஒன்று அமைக்கப்பட்டு அந்த வழியில் பல ஆண்டுகளாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு உள்ளூர் பொதுமக்கள் பயன்படுத்தும் சிறப்பு வழியை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அடைத்து விட்டு வெளியூர் பக்தர்கள் செல்லும் 200 ரூபாய் கட்டண வழியில் கட்டணமின்றி செல்லுமாறு அறிவித்திருந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளூர் பொதுமக்கள் திருக்கோவிலில் உள்ளூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் உரிமையை திருக்கோயில் நிர்வாகம் பறிப்பதால் உடனடியாக உள்ளூர் பொதுமக்கள் செல்லும் சிறப்பு வழியை திறந்து விட வேண்டும் என கோரிக்கை வைத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பொதுமக்களின் இந்த கோரிக்கைக்கு ஆதரவாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் கலோன் தலைமையில் ராமேஸ்வரம் திருக்கோயில் இணை ஆணையர் செல்லத்துறை ராமேஸ்வரம் மக்கள் நல பேரவை குழு இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் இன்று காலை ராமேஸ்வரம் மேற்கு கோபுர வாசல் வழியாக ஆலய நுழைவுப் போராட்டம் நடைபெறும் ராமேஸ்வரம் மக்கள் நல பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டது.
அந்தவகையில் இன்று காலை திட்டக்குடியில் இருந்து ராமேஸ்வரம் மேற்கு கோபுர வாசல் வரை பேரணியாக வந்த பொதுமக்கள் ஆலய நுழைவு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து நிறுத்த போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவில் வாசல் முன் நடுத்தெரு சாலையில் அமர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட மக்களை போலீசார் கைது செய்து தனியார் கல்யாண மண்டபத்தில் அடைத்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராகவும், இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினர். இதனால் ராமேஸ்வரம் திருக்கோயில் முன்பு ஒரு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து ஏடிஎஸ்பி சுப்பையா தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications