ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆக்ரோஷமான சூறைகாற்று.. நடுவழியில் பீதியில் நின்ற ராமநாதபுர மக்கள்.. 2 நாட்களுக்கு பலத்த மழை

ராமநாதபுரத்தில் 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: இன்றும் நாளையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதித கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சூறைக்காற்றுடன் அங்கு கனமழை பெய்து வருகிறது.

Recommended Video

    ஆக்ரோஷமான சூறைகாற்று.. நடுவழியில் பீதியில் நின்ற ராமநாதபுர மக்கள்.. 2 நாட்களுக்கு பலத்த மழை

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.. இதில் சில இடங்களில் மழை மிகவும் அதிகமாக பெய்து வருகிறது.

    எனினும் சென்னை அதிக அளவு பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது.. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 முறை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது... அந்த பாதிப்பில் இருந்து சென்னைவாசிகள் மீண்டு வர முடியாத நிலையில், அடுத்தடுத்து மழை இருக்கும் என்கிறார்கள்.

     கனமழை... தத்தளிக்கும் பூந்தமல்லி.. நசரத் பேட்டையில் 500 குடும்பங்கள் தவிப்பு கனமழை... தத்தளிக்கும் பூந்தமல்லி.. நசரத் பேட்டையில் 500 குடும்பங்கள் தவிப்பு

     சென்னை மழை

    சென்னை மழை

    இந்நிலையில், வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் சொல்லும்போது, "சென்னையில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு எதிர்பார்க்கலாம். ஆனால், அதற்கு பிறகு சென்னைக்கு மழை வாய்ப்பு குறைந்துவிடும்... இனி, தென்மாவட்டங்களில்தான் மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார். சென்னைக்கு இது ஒருவகையில் ஆறுதல் அளிக்கும் செய்தி என்றாலும், தென்மாவட்ட மக்களுக்கு கலக்கம் சூழ்ந்துள்ளது.

     பாம்பன் மண்டலம்

    பாம்பன் மண்டலம்

    இதனிடையே, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, தாழ்வு மண்டலமாக மாறகூடும் என்றும் இதனால் தென் கடலோர மாவட்டங்களில் மணிக்கு 50 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது... அதன்படி, இன்று பகல் 11 மணி அளவில் பாம்பன் மண்டபம் இடையேயான தனுஷ்கோடி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உருவாக்கிய சூறைக்காற்று கடலின் மேற்பரப்பில் உள்ள கடல் நீருடன் வீசியதால் சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது.

    மட்டைகள்

    மட்டைகள்

    இதனால் தேசிய நெடுஞ்சாலையில் கடக்க முயன்ற இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத சூழ்நிலையில் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டனர்.. தொடர்ந்து அப்பகுதியில் வீசிய பலத்த சூறைக்காற்று காரணமாக சாலையோரங்களில் இருந்த பனை மரங்கள் காற்றில் ஆக்ரோஷமாக அசைந்தது.. இதில் காற்றின் வேகத்தில் மரத்தில் இருந்த மட்டைகள் பிடிங்கி வீசியதால், வாகன ஓட்டிகள் யாருமே அந்த பகுதியை கடக்க முடியாமல் நடுவழியிலேயே வண்டிகளை நிறுத்திவிட்டனர்.

     2 நாட்களுக்கு மழை

    2 நாட்களுக்கு மழை

    தொடர்ந்து வீசி வரும் சூறைக்காற்று காரணமாக தோணித்துறை பகுதியில் மீனவர் குடிசை சேதமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடலில் வீசிவரும் சூறைக்காற்று காரணமாக கடற்கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு நாட்டுப்படகுகளை மீனவர்கள் தங்களது பாதுகாப்பான இடங்களில் மாற்றி வருகின்றனர்.. இன்றும் நாளையும் ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மண்டபம், பாம்பன் தங்கச்சிமடம், ராமேஸ்வரம் பகுதியில் தொடர்ந்து சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது..

    English summary
    The next Two days heavy in Ramnad district and public affect seriously
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X