ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"சபலம்".. வள்ளியுடன் ஒரே வீட்டில் 80 வயசு தாத்தா.. கடைசியில் "அந்த" 4 பேர்.. கிறுகிறுத்த ராமநாதபுரம்

80 வயது தாத்தாவை கொன்ற 4 பேருக்கும் ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

ராமநாதபுரம்: 80 வயசு தாத்தா, தன்னுடைய கள்ளக்காதலியை விட்டு பிரிந்து வந்துட்டாராம்.. அதுக்காக ஒரு கொலையே நடந்துள்ளது..!

கள்ளக்காதல் அட்டகாசத்துக்கு தாத்தாக்கள்கூட விதிவிலக்கல்ல.. உலகம் முழுவதும் இந்த கள்ளக்காதல்கள் பெருகி கிடக்கின்றன. இதற்கெல்லாம் சட்டம், தண்டனைகள் கொண்டுவந்தாலும், திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற நிலைமைதான்.

தனிமனித ஒழுக்கம் எல்லா காலத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும், எல்லா நாடுகளிலும் மிகவும் முக்கியமானது.. எதிர்கால தறைமுறைகளின் நலனை நினைத்தாவது, இவைகளை பெரியவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கள்ளக்காதல் ஜோடியின் பெரிய மனசை பார்த்தீங்களா.. தற்கொலை கடிதத்தில் தாராளம்.. கடுப்பில் குடும்பங்கள் கள்ளக்காதல் ஜோடியின் பெரிய மனசை பார்த்தீங்களா.. தற்கொலை கடிதத்தில் தாராளம்.. கடுப்பில் குடும்பங்கள்

 முனியசாமி

முனியசாமி

ஆனாலும் வயதானவர்களே சில சமயம், இந்த பாழாய்போன கள்ளக்காதலில் விழுந்துவிடுவார்கள்.. இதன்விளைவு, கடைசியில் கொலைவரை வந்து நின்றுவிடுகிறது.. அப்படித்தான் நம் தமிழகத்தில் ஒரு தாத்தா சிக்கி உள்ளார்.. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது பாம்பன் சின்ன பாலம்.. இந்த பகுதியை சேர்ந்தவர் முனியசாமி.. 80 வயதாகிறது.. அதே பகுதியில் மனைவியுடன் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார்.. திருமணம் ஆனதில் இருந்தே மனைவியுடன் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்துள்ளார். பிறகுதான் திடீரென கள்ளக்காதலில் சிக்கி விட்டார்.

 தாத்தா - வள்ளி

தாத்தா - வள்ளி

அதே பகுதியில் வசித்து வந்த வேறொரு பெண்ணுடன் உறவு ஏற்பட்டுள்ளது.. அந்த பெண்ணின் பெயர் வள்ளி.. ஒருகட்டத்தில் வள்ளியை விட்டு இருக்க முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டதால், வள்ளியுடனேயே சென்றுவிட்டார்.. அவருடனேயே ஒரே வீட்டில் சில காலம் சேர்ந்து வாழ்ந்து வந்திருக்கிறார். கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக இவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தினார்.. அதாவது தாத்தாவுக்கு 60 வயதாகும்போது வள்ளி பழக்கமாகி உள்ளதாக தெரிகிறது.

 4 பேர் தாக்குதல்

4 பேர் தாக்குதல்

தற்போது 80 வயதாகிவிட்டதால், உடல்நிலை மோசமாகி விட்டது.. அதனால், கடந்த வருடம் தன் குடும்பத்தை மறுபடியும் தேடி வந்து ஒன்றாக சேர்ந்துவிட்டார்.. இப்படிப்பட்டசூழலில் கடந்த வருடம் ஜனவரி 3ம்தேதி, முனியசாமி டீக்கடைக்கு போனார்.. அங்கு வள்ளியின் சொந்தக்கார்கள் 4 பேர், முனீஸ்வரன் 28, சரவணக்குமார் 28, நிர்மல்குமார் 22, முனீஸ்வரன் 22, ஆகியோர் முனியசாமியை வழிமறித்தனர்.

 வள்ளி நிலைமை

வள்ளி நிலைமை

"வள்ளியை தனியா விட்டுட்டு ஏன் போனே? அங்கே அவள் அனாதையாக இருக்கிறாள்.. நீ மட்டும் உன் குடும்பத்துடன் சொகுசாக வாழ்கிறாயா?" என்று கேட்டு கீழே தள்ளி முனியசாமியை ஏறி மிதித்து தாக்கி உள்ளனர்.. இதில், பேச்சுமூச்சு இல்லாமல் முனியசாமி மயக்கமடைந்துவிட்டார்.. உடனே அங்கிருந்தோர் அவரை ஒரு ஆட்டோவில் ஏற்றி ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.. ஆனால், முனியசாமி வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் சொன்னர்கள்..

 ஜட்ஜ் தீர்ப்பு

ஜட்ஜ் தீர்ப்பு

இதையடுத்து, முனியசாமி மகன் முனீஸ்வரன் போலீசில் புகார் தந்தார்.. அந்த புகாரின்பேரில் வழக்கு பதிய செய்யப்பட்டு, 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்... இது தொடர்பான வழக்கும் ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.. அரசு தரப்பில் வழக்கறிஞர் மனோகரன் ஆஜரானார்.. இது தொடர்பாக தீர்ப்பும் நேற்றைய தினம் தரப்பட்டது.. உ.முனீஸ்வரன், சரவணக்குமார், நிர்மல்குமார், ஆர். முனீஸ்வரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி சீனிவாசன் தீர்ப்பளித்தார். அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது...!

English summary
the story of an 80 year old man and Ramnad district additional session court sentenced life imprisonment for four 80 வயது தாத்தாவை கொன்ற 4 பேருக்கும் ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X