Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமேஸ்வரம் கடலில் ஒதுங்கிய உருவங்கள்.. வட்ட வட்டமாய்! அதை மட்டும் தொடக் கூடாது.. குழம்பிய மீனவர்கள்!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் சேரான் கோட்டை கடல் பகுதியில் இறந்து கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்களால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்களை மீனவர்கள், சுற்றுலாப் பயணிகள் தொட வேண்டாமென அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ராமேஸ்வரம் தீவுப்பகுதி மன்னர் வளைகுடா பாக் ஜெலசந்தி கடற்பகுதியை ஒட்டிய தீவு பகுதியாகும். இத்தீவு பகுதியில் அரிய வகை உயிரினங்களான பாலூட்டி வகைகள், பவளப்பாறைகள், ஜெல்லி மீன்கள் டால்பின்கள் உள்ளிட்டவை அதிகமாக காணப்படுவது வழக்கமாக உள்ளது

இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களாக ராமேஸ்வரம் சேரான் கோட்டை கடற் பகுதியில் அதிகப்படியான விஷத்தன்மை உள்ள அரிப்பு தன்மையை ஏற்படுத்தக்கூடிய ஜெல்லி மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது.

Rameswaram Fishermen Jellyfish

இந்த மீன்களால் மீனவர்கள் தற்போது அவதிப்படுவதாகவும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருக்கும் நிலையில் நாட்டு படகு மீனவர்கள் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மீன்பிடித் தொழில் நடத்தி வருகின்றனர். இந்த நேரத்தில் ஜெல்லி மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதால் மீனவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் உடனடியாக மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் ஜெல்லி மீன்கள் இறப்பதற்கு காரணம் அறிந்து மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்ட போது ராமேஸ்வரம் கடற் பகுதியில் திடீரென தற்போது சொறி மீன் எனப்படும் ஜெல்லி மீன்கள் நேற்று முதல் கடற்கரை ஓரங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. அதற்கான காரணத்தை கண்டறியும் ஆய்வானது நடைபெற்று வருகிறது. தற்போது இந்த வகை ஜெல்லி மீன்கள் ஐந்து சென்டிமீட்டர் முதல் மூன்று அடி வரை வளரக்கூடியவை உடல் முழுவதும் திரவப் பொருளால் ஆனது. ஐந்து சதவீதம் மட்டுமே திடப்பொருளாக இருக்கும்.

தற்போது இந்த வகை ஜெல்லி மீன்களை தொட்டால் மீனவர்கள் பொதுமக்களுக்கு அலர்ஜி, அரிப்பு உள்ளிட்டவை ஏற்படும். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருக்கும். சேராங்கோட்டை முதல் கோதண்டராமர் கோவில் எதிரில் உள்ள கடற்கரை வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நூற்றுக்கணக்கான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கி கிடக்கின்றன. தற்போது மீன்கள் ஒதுங்கி வருவது குறித்து மீன் வளத் துறை மற்றும் மத்திய கடல் சார் ஆராய்ச்சி நிலையம் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

எனவே பொதுமக்கள் மீனவர்கள் யாரும் அதனை தொட வேண்டாம். ஒரு சிலருக்கு வாந்தி மயக்கம் அரிப்பு ஆகியவை ஏற்படலாம். வெறும் கையால் இந்த மீனைத் தொட்டால் கடும் விஷத்தன்மை உடலில் பாயும். இதனால் உடல் வேதனை மூச்சு திணறல் கூட ஏற்படலாம். ஒருவேளை அது போன்ற பிரச்சனைகள் இருந்தால் உடனே மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் கடும் பக்க விளைவுகள் ஏற்படும் மீனவர்கள் வலைகளில் விழும் மீன்களை தொடாமல் இருப்பது நல்லது. அதே நேரத்தில் இந்த வகை ஜெல்லி மீன்களால் கடல் வளத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. மீனவர்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை என கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+