பதவிகள் அத்தனையும் ஒரே குடும்பத்திற்கே.. ராமநாதபுரம் தவெக நிர்வாகிகளால் ஷாக்கான விஜய்!
சென்னை: ராமநாதபுரம் தவெக மாவட்டச் செயலாளர் மலர்விழி ஜெயபாலா கட்சி பொறுப்புகள் அத்தனையையும் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு கொடுத்திருப்பது அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தவெக தலைமை வரும் சென்ற போதும், பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கரூர் விவகாரம் தவெகவுக்கு மிகப்பெரிய சறுக்கலாக அமைந்துள்ளது. கடந்த ஒரு மாதமாகவே தவெக நிர்வாகிகள் தலைமறைவாக இருந்து வந்தனர். தற்போது பொதுவெளியில் சுற்றித் திரிந்தாலும், பெரிதாக கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. தவெக தலைமையும் இதே பாணியில் இயங்கி வருகிறது.

கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.20 லட்சம் கொடுத்திருந்தாலும், இதுவரை நேரில் சென்று விஜய் யாரையும் சந்திக்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் எந்தவொரு விளக்கத்தையும் கூட கொடுக்கவில்லை. கடந்த சில நாட்களாகவே விஜய் வீட்டிற்கும், பனையூரில் உள்ள அலுவலகத்திற்கும் மாறி மாறி சென்று வருகிறார்.
அடுத்தக் கட்ட சுற்றுப்பயணம் குறித்தோ, தேர்தல் பணிகள் தொடர்பாகவோ விஜய் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. விஜய்யின் இந்த அமைதி, அக்கட்சி நிர்வாகிகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும் திமுகவுக்கு கடுமையான போட்டியை அளிக்க வேண்டும் என்று விஜய் தீவிரமாக இருந்து வருகிறார்.
அடுத்தக் கட்ட சுற்றுப்பயணத்தில் திமுக vs தவெக என்பதை முன்னிறுத்தியே பிரச்சாரம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் குடும்ப கட்சி என்பதையும் விஜய் தனது பிரச்சாரத்தில் முன்னிறுத்த உள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் திமுக வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிடுவதற்கு தவெக நிர்வாகிகள் சம பலத்துடன் இருக்கிறார்களா என்று விஜய் தரப்பு ஆய்வு நடத்தி இருக்கிறது.
இதில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள் பட்டியலை பார்த்த விஜய் மிரண்டு போயிருக்கிறார். அதாவது ராமநாதபுரம் தவெகவின் மாவட்டச் செயலாளராக மலர்விழி ஜெயபாலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அந்த பொறுப்பை மொத்தமாக மேற்கொண்டு வருவது அவரின் கணவர் ஜெயபாலா தான் என்கிறார்கள். இவர் நெடுஞ்சாலை துறையில் பணியாற்றி வருகிறார்.
ராமநாதபுரம் மாவட்ட தவெகவில் நடந்த நிர்வாகிகள் நியமனத்தில் முழுக்க முழுக்க ஜெயபாலா முடிவு எடுத்துள்ளார். அதன்படி 10 மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும் ஜெயபாலாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். மகன், மகள், சகலை, மனைவியின் தங்கை என்று குடும்ப உறுப்பினர்களுக்கும் பொறுப்பை கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.
ராமநாதபுரம் தவெகவின் நிழல் மாவட்டச் செயலாளராக ஜெயபாலா செயல்பட்டு வருவது தெரிந்தும், மாவட்ட நிர்வாகம் தரப்பில் பெரிதாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்று கூறுகிறார்கள். இதற்கு பின் திமுகவின் மறைமுக கணக்கு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தவெகவினரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
-
பெண்கள் குறித்த பொன்ராஜ் பேச்சுக்கு விஜய் கடும் கண்டனம்.. திமுகவையும் காட்டமாக விமர்சித்த விஜய்! -
தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பா? நாளை கூட்டம் என இன்று எழுதி தந்தா போதாது.. குமரகுருபரன் விளக்கம் -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் திடீர் ரத்து.. தேர்தல் ஆணைய அனுமதி கிடைக்காததால் ஒத்திவைப்பு! -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
எல்லாமே பொய்! விஜய்க்கு குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்! பர்சனல் விஷயத்தை ஓபனாக பேசிய ரம்பா! வதந்திகளுக்கு பதிலடி -
பாஜக பெயரை சொல்லவே சாகிறார்.. இவரா முதலமைச்சர்.. விஜய்யை வெளுத்து வாங்கிய கீதா ஜீவன் -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications