Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘டேஞ்சர்’ சோனில் தமிழ்நாடு! ஒரே குரலில் பேசும் அரசியல் தலைவர்கள்.. திமுக அரசு என்ன செய்யப் போகிறது?

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: தமிழ்நாட்டில் வளம் கொழிக்கும் விவசாய நிலங்களை எண்ணெய்க் கிணறுகள் ஆக்கத் துடிக்கும் ஓ.என்.ஜி.சி திட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் ஒருமித்த குரல்கள் எழுந்துள்ளன. நெடுவாசல், கதிராமங்கலம் போல, ஓ.என்.ஜி.சிக்கு எதிராக விவசாயிகள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.

மத்திய அரசின் புதிய எண்ணெய் எடுப்பு கொள்கையாகிய ஹெல்ப் (Hydrocarbon Exploration and Licensing Policy) அடிப்படையில் மூன்றாவது சுற்று திறந்தவெளி ஏலம் மூலம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,403 சதுர கிலோ மீட்டர் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி பெற்றது. அதன்படி, தற்போது ராமநாதபுரம் பகுதியில் 2,000 முதல் 3,000 மீட்டர் ஆழத்தில் 20 சோதனை கிணறுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

Unanimous voice raising in Tamil Nadu against ONGCs plan to hydro carbon wells

ராமநாதபுரம் மாவட்டத்தின் திருவாடானை, ராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, கீழக்கரை மற்றும் கடலாடி ஆகிய வட்டங்கள் மற்றும் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை வட்டம் போன்ற பகுதிகளில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. மேலும் அரியலூர் மாவட்டத்திலும் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தில் அனுமதி கோரி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கதிராமங்கலம் ஆகிய கிராமங்களில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டங்களுக்கு எதிராக பெருமளவில் மக்கள் போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, புதிய திட்டங்கள் கைவிடப்பட்டன. ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டால், விவசாயத்தை நம்பியுள்ள மக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள், எண்ணெய் எரிவாயு எடுக்கும் திட்டத்தால், காவிரி பகுதிக்கு அருகில் உள்ள கடல் பகுதியும் பாதிக்கப்படும். விவசாயத்தை நம்பி வாழும் விவசாயிகள், கடலை நம்பி வாழும் மீனவர்களை வஞ்சிக்கும் திட்டமாக ஹைட்ரோகார்பன் திட்டம் அமையும் என பெரும் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

தமிழகத்தில் மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டங்களால் நிலத்தடி நீரும், பெருமளவு விவசாய நிலங்களும் பாதிப்படைவதை தடுக்கும்‌ வகையில் கடந்த 2020ஆம் ஆண்டு, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தச் சட்டத்தால் புதிதாக அனுமதி பெற்று எந்த ஹைட்ரோகார்பன் கிணறுகளையும் அமைக்க முடியாது. இது டெல்டா மாவட்ட விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.

எனினும், புதிய திட்டங்களுக்கு மட்டுமே அனுமதி இல்லையே தவிர ஏற்கனவே செயல்படும் எரிவாயு கிணறுகள் தற்போதும் இயங்கி வருகின்றன. தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் 200-க்கும் மேற்பட்ட கிணறுகளை அமைத்து எண்ணெய் மற்றும் எரிவாயுவை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தான் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரொ கார்பன் கிணறுகளை அமைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்கு வெளியில் இருக்கும் மாவட்டங்களான ராமநாதபுரம், சிவகங்கை நோக்கி ஓ.என்.ஜி.சியின் கரங்கள் விரிந்திருப்பது விவசாயிகள், பொதுமக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால் வறட்சி மிகுந்த ராமநாதபுரம் மாவட்டம், மேலும் பாலைவனமாகும் என சூழலியாளர்கள், விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டால், தொடர்ந்து, தென் மாவட்டங்கள் முழுவதையும் ஓ.என்.ஜி.சி கபளீகரம் செய்துவிடும். எனவே, ஹைட்ரோ கார்பன் திட்டங்களால் ஏற்படும் நிலத்தடி நீர், விவசாய நில பாதிப்பை முன்னிறுத்தி, விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க வேண்டும், எந்த வடிவிலும், நிலத்தை நாசமாக்கும் திட்டங்களை தமிழ்நாட்டுக்குள் இனி அனுமதிக்கவே கூடாது என ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

டெல்டா விவசாயிகளை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக பெரும் போராட்டங்கள் வெடித்தன. இப்போது, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க திமுக அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்ற குரல்கள் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கி இருக்கின்றன. அதிமுக, பாமக, மதிமுக என அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக மக்கள் கொதிப்பு மிகுந்த இந்தப் பிரச்சனையில் திமுக அரசு என்ன செய்யப் போகிறது என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+