தேமுதிக யாருடன் கூட்டணி...? ஜனவரி மாதம் விஜயகாந்த் அறிவிப்பார்... பிரேமலதா தகவல்
ராமநாதபுரம்: வரும் சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பதை வரும் ஜனவரி மாதத்தில் விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி தேமுதிக தனி போட்டியிட வேண்டும் என்பது தான் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது எனக் கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் அதன் பின்னர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

கூட்டணி நிலைப்பாடு
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணிக் கணக்குகளை இப்போதே கூட்டிக் கழிக்கத் தொடங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்த வகையில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாட்டை இந்த முறை விரைவாக அதாவது தேர்தலுக்கு 4 மாதங்களுக்கு முன்பாகவே அறிவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது அக்கட்சி தலைமை. இதற்கான திரைமறைவு பேச்சுவார்த்தைகள், ஆலோசனைகள், ஒரு பக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

யாருடன் கூட்டணி?
இந்நிலையில் தேமுதிக தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வரும் செந்தில் என்ற ஊழியரின் திருமணத்தை நடத்தி வைப்பதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூருக்கு வருகை தந்திருந்தார் பிரேமலதா. அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த கால தேர்தல்களை போல் அல்லாமல் இந்தமுறை தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு பற்றி விரைந்து அறிவிப்போம் எனத் தெரிவித்தார்.

விஜயகாந்த் அறிவிப்பார்
மேலும், தற்போது வரை தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் என்பதே தங்கள் கட்சியினர் அனைவரது விருப்பம் என்றும் இருப்பினும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்டி அதில் கலந்துபேசி இறுதி முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார். வரும் தைப்பொங்கலுக்குள் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.

தேமுதிகவில்
மற்ற எந்த அரசியல் கட்சிகளிலும் இல்லாத வகையில் தேமுதிகவில் இளைஞர்கள் மிகவும் சுறுசுறுப்பாக கட்சிப் பணிகளை கவனித்து வருவதாகவும் பிரேமலதா பெருமிதம் தெரிவித்தார். கட்சியின் தலைமை அலுவலக ஊழியர் திருமணத்திற்கு விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனும் வந்திருந்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications