இதுதான் டார்கெட்.. தீயா வேலை பாருங்க.. தமிழக பாஜகவினருக்கு அமித் ஷா ஆணை!
லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
Recommended Video

ராமநாதபுரம்: லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 35 இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுக்க பாஜக தேசிய தலைவர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பேசி வருகிறார். அதன் ஒரு பகுதியாக இன்று அவர் தமிழகத்தில் ராமநாதபுரம் வந்தார்.
ராமநாதபுரத்தில் லோக்சபா தேர்தல் தொகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அதிமுக - பாமக - பாஜக கூட்டணி உருவாகி இருக்கும் மகிழ்ச்சியில் அவர் பேசினார்.

எத்தனை தொகுதிகள்
அமித் ஷா தனது பேச்சில், நாம் வெறும் ஐந்து தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறோம் என்று கூற வேண்டாம். நாம் மொத்தம் 40 இடங்களில் போட்டியிடுகிறோம். அதிமுக, பாமக வேட்பாளர்கள் எல்லோரும் மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றுதான் போட்டியிடுகிறார்கள். அதனால் அவர்களுக்காக பாஜகவினர் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும்.

ஊழல் கட்சி
காங்கிரஸ் கட்சியும், திமுகவும் ஊழல் கட்சிகள். இந்த கட்சிகள் தற்போது மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் ஒன்றாக சேர்ந்து இருக்கிறது. அவர்கள் ஊழலின் பக்கம் நிற்கிறார்கள். பாஜக அதிமுக கூட்டணி மக்களின் பக்கம் நிற்கிறது, நல்ல ஆட்சியின் பக்கம் நிற்கிறது. காங்கிரஸ் - திமுக மட்டுமே 12 லட்சம் கோடிக்கு ஊழல் செய்துள்ளது.

மோடி கடினம்
இந்தியாவில் கடினமாக உழைக்கும் ஒரே நபர் மோடி மட்டும்தான். பிரதமர் மோடி ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தில் 18 மணி நேரம் உழைக்கிறார். இதை போல வேறு எந்த தலைவரும் உழைத்தது கிடையாது. இப்படிப்பட்ட ஒரு தலைவர்தான் நம்முடைய நாட்டிற்கு மீண்டும் பிரதமர் ஆக வேண்டும்.

டார்கெட் என்ன
இந்த தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பெறுவதுதான் நம்முடைய இலக்காக இருக்க வேண்டும். தமிழகத்தில் பாஜக கூட்டணி 35 இடங்களை குறைந்தபட்சம் பெற வேண்டும். நம்முடைய குறைந்தபட்ச இலக்கு அதுதான். அதற்காக நாம் இன்றில் இருந்து உழைக்க வேண்டும் என்று, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications