ராமநாதபுரத்தில் குளிக்க போன களஞ்சியம்.. எந்த தந்தையும் பார்க்கக்கூடாத கோலம்.. இருவருமே உயிரோடு இல்லை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்த களஞ்சியம் என்பவர் மீனவர் ஆவார். இவர் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார். மோட்டார் இயங்காததால் மின் ஒயரை சரி செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். மீண்டும் எழுந்திருக்கவே இல்லை.. இதை பார்த்த அவரது தந்தை, மிகவும் தவறான முடிவெடுத்துள்ளார். இது மண்டபம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மீனவர் காலனியை சேர்ந்த 28 வயதாகும் களஞ்சியம் என்பவர் மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஐஸ்வர்யா. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறார்கள். களஞ்சியம் கடந்தசில நாட்களுக்கு முன்பு மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். கடலில் தங்கி மீன்பிடித்த களஞ்சியம் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பினார்.

பின்னர் மீனவர் களஞ்சியம் குளிப்பதற்காக மோட்டார் சுவிட்சை ஆன் செய்தார். மோட்டார் இயங்காததால் மின் ஒயரை சரி செய்தபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மண்டபத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றார்கள். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே களஞ்சியம் இறந்துவிட்டதாக தெரிவித்தார்,
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை சேகர்(55) மற்றும் குடும்பத்தினர் மிகுந்த சோகம் அடைந்தனர். உடைந்து போய் கதறி அழுதனர். இந்நிலையில் மகன் இருந்த துக்கம் தாங்க முடியாமல் சோகத்தில் வீட்டுக்கு சென்ற சேகர், அங்கு தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.
வீட்டுக்கு வந்த குடும்பத்தினர் சேகர் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது அவர்களது குடும்பத்தினரை மேலும் மனவேதனை அடைந்தனர். தகவல் அறிந்து மண்டபம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரிதா பாலு, சப்-இன்ஸ்பெக்டர் முத்து முனியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். சேகர், களஞ்சியத்தின் உடல்கள், பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது, இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications