"விஐபி" புள்ளிகள் யார்.. லாட்ஜில் அதிமுக பிரமுகர்.. பரமக்குடி கேஸில் திடீர் திருப்பம்.. பரிதாப பிஞ்சு
15 வயது சிறுமியை சீரழித்த அதிமுக பிரமுகர் உட்பட 5 பேரிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்
ராமநாதபுரம்: பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர் சிக்கி உள்ள நிலையில், அவரிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இதையடுத்து இந்த வழக்கில் புதிய திருப்பமும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு ஆடியோ ராமநாதபுர போலீசுக்கு சென்றுள்ளது.. அதில், "சின்னப்புள்ளை வேணும்னு கேட்டு அடம் பிடிச்சு அனுபவிச்சவன் பணம் கொடுக்காமல் எப்படி ஏமாத்தலாம்? இதெல்லாம் அந்த பெரிய மனுசனுக்கு அழகா?" என்று ஒரு பெண் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.
இப்படி ஆதங்கத்தை இன்னொரு நபரிடம் வெளிப்படுத்தியவர் ஒரு பெண் பாலியல் புரோக்கர் என்கிறார்கள்.. இந்த ஆடியோ, ராமநாதபுரம் மாவட்ட போலீஸாருக்கு சென்றுள்ளது.

ஐயோ ஆடியோ
அந்த ஆடியோவின் அடிப்படையில், சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதை அறிந்து விசாரணையை துவங்கி உள்ளது போலீஸ்.. இதனடிப்படையில் பல விஐபிக்களையும் அதிரடியாக கைது செய்து போக்சோவிலும் உள்ளே தள்ளியுள்ளது. இதையடுத்துதான், சிகாமணி என்பவரது பெயர் அடிபட்டது.. பரமக்குடி நகராட்சியின் 3-வது வார்டு அதிமுக கவுன்சிலர் வைகைநகர் சிகாமணி ஆவார்.. அதேபோல, மறத்தமிழர் சேனை என்ற அமைப்பின் மாநிலத் தலைவரான புதுமலர் பிரபாகரன், களஞ்சியம் ரெடிமேட்ஸ் ராஜாமுகமது ஆகியோர் 3 பேரும் சேர்ந்து 9ம் வகுப்பு மாணவியுடன் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார்கள்..

15 வயது சிறுமி
இதற்கெல்லாம் உதவியாக புதுநகர் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி ஆகிய 2 பெண்களும் புரோக்கர்களாக செயல்பட்டுள்ளனர் என்பதை அறிந்து அதிர்ந்து போனார்கள் போலீசார்.. இதையடுத்து, மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனர்.. கவுன்சிலர் சிகாமணிக்கு 44 வயதாகிறது.. பிரபாகரன் 42 வயது, ஜவுளிக்கடை ஓனர் ராஜா முகமது 34 வயதாகிறது.. இந்த 3 பேரும் சேர்ந்து 15 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.. இந்த சம்பவம் பரமக்குடி அதிமுகவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி போலீஸ் டிஜிபி உத்தரவிட்டார்.

VIP யார்
அதன்படி சிவகங்கை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கீதா இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் பாதிக்கப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்திய நிலையில், ஜெயிலில் உள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு செய்தனர்... மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கோபிநாத், 5 பேரையும் 3 நாட்களுக்கு 17ம் தேதி வரை அதாவது நாளை வரை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். கோர்ட்டு அனுமதி அளித்ததும், அதன் தீர்ப்பு நகலை பெற்றுக்கொண்ட சிபிசிஐடி போலீசார் சிகாமணி உள்ளிட்ட 3 பேர் அடைக்கப்பட்ட ராமநாதபுரம் ஜெயிலுக்கு சென்று அவர்களை காவல் எடுத்தனர்.

ஆக்ஷன்
இதேபோல் பரமக்குடி மகளிர் சிறையில் உள்ள 2 பெண் புரோக்கர்களும் காவலில் எடுக்கப்பட்டனர். மொத்தம் 5 பேரும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திடீர் திருப்பமாக சில முக்கிய புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.. அதன் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.. போலீஸ் காவல் முடிந்த பிறகு, 5 பேரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.. அதேசமயம், அந்த முக்கிய புள்ளிகளிடமும், ஆக்ஷன் பாய உள்ளதால், இந்த வழக்கில் மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது..!!

கயல்விழி
சம்பந்தப்பட்ட பெண் புரோக்கர்கள், எந்நேரமும் சிறுமிகளுடன் சுற்றி திரிந்து கொண்டிருப்பாராம்.. தன்னை அணுகும் பெரிய மனிதர்களிடம் ரேட் பேசி விடுவாராம்.. ஒரு மணி நேரத்திற்கு 10 ஆயிரம் என்றெல்லாம் பணம் வசூலித்தும் வந்துள்ளார்.. பணத்தாசை காட்டி, சிறுமிகளின் சம்மதத்துடன், இப்படியான காரியத்தில் கயல்விழி இறங்கி வருவதாக சொல்கிறார்கள்... அதிமுக பிரமுகர் சிகாமணி ரியல் எஸ்டேட் நிறுவனத்திலும் வேலை செய்து வருகிறார். இவரின் பக்கத்து வீட்டில்தான், சம்பந்தப்பட்ட 9ம் வகுப்பு மாணவி வசித்து வந்திருக்கிறார்.

கவுன்சிலர் பிரமுகர்
ஆனால், ஏழ்மை நிலையில் உள்ளவர்.. வறுமை காரணமாக, ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் தவித்து வந்துள்ளார்.. ஒருநாள், கயல்விழியிடம் தன்னுடைய பெற்றோரின் வறுமை நிலையை சொல்லி, தனக்கு படிப்பதற்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று கேட்டிருக்கிறார் அந்த சிறுமி.. அதற்கு, கயல்விழி, தன்னுடைய முதலாளி உனக்கு நிச்சயம் உதவுவார் என்று சொல்லி, கடந்த டிசம்பர் மாதம் அதிமுக கவுன்சிலர் சிகாமணியிடம் அழைத்து சென்றுள்ளார். சிறுமியை பார்த்த சிகாமணி, உடனே அவருக்கு உதவுவதாக சொல்லி, நேராக ஒரு லாட்ஜூக்கு அழைத்து சென்றுள்ளார்.

லாட்ஜ்
அங்கு சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதற்கு பிறகு, அங்கிருந்தபடியே, தன்னுடைய நண்பர்கள் ராஜா முகமது, பிரபாகரன் 2 பேரையும் போனை போட்டு வரவழைத்துள்ளார்.. 3 பேரும் சேர்ந்து அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது அடிக்கடி தொடர்ந்தும் வந்துள்ளது.. ஒரு கட்டத்தில் சிறுமி, தனக்கு நடந்தது குறித்து, தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி அழுதுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அதற்கு பிறகுதான் போலீசுக்கு ஓடியுள்ளனர்.

விஐபி யாரோ
புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த நம் போலீஸார், அடுத்த 24 மணி நேரத்தில் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகம்மது + கயல்விழி, அன்னலட்சுமி என 5 பேரையும் தூக்கி உள்ளே வைத்தது.. ஆனால், இப்போது இந்த வழக்கில் மேலும் பல புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளதால், விவகாரம் பெரிதாகும் என்கிறார்கள்.. அந்த விஐபிகள் யார் என்று தெரியவில்லை.. இதெல்லாம் கேட்டு பரமக்குடியே கொந்தளித்து கிடக்கிறது.. படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அதற்காக உதவி கேட்ட அந்த பிஞ்சுவின் மனநிலையை நினைத்தாலே, பதறச்செய்கிறது நம்முடைய மனம்..!!!
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications