சலித்தது திருமணம்.. 'எக்ஸ்'-ஐ தேடிச் சென்ற இளம்பெண்.. துடிக்க துடிக்க.. ராணிப்பேட்டையில் பரிதாபம்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது முன்னாள் காதலனை தேடிச் சென்ற பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

சாதாரணமாக பேசி தீர்த்திருக்க வேண்டிய தகராறை பெரிதாக்கி, திருமண வாழ்க்கையில் இருந்து தடம்புரண்டதால் அப்பெண்ணுக்கு இந்த கதி நேர்ந்துள்ளது.
இந்தப் பெண்ணின் சபல புத்தியால் அவருக்கு பிறந்த பச்சிளம் குழந்தைதான் அநாதையாக மாறியுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

பூத்துக்குலுங்கிய காதல்..
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா (24). டிப்ளமோ நர்சிங் படித்து முடித்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். அப்போது ரேஷ்மாவுக்கும், குமரன் (26) என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.

வேறொரு நபருடன் திருமணம்
இதனிடையே, இவர்களின் காதல் விவகாரம் ரேஷ்மாவின் பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ரேஷ்மாவை சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு அழைத்து வந்த அவரது பெற்றோர், உறவினரான கோபிநாத் என்பவருக்கு ரேஷ்மாவை அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்தனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், ரேஷ்மாவுக்கு சில மாதங்களுக்கு முன்பு குழந்தையும் பிறந்தது.

எக்ஸை தேடிச் சென்ற ரேஷ்மா..
இவ்வாறு சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையைில் திடீரென புயல் வீச தொடங்கியது. கோபிநாத் இரவு தாமதமாக வருவதை சந்தேகக் கண்ணோடு பார்க்க ஆரம்பித்தார் ரேஷ்மா. இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த சூழலில், கடந்த செப்டம்பர் மாதம் தனது கணவனை விட்டு பிரிந்து தன் பெற்றோர் வீட்டுக்கு ரேஷ்மா வந்தார். கணவன் மீதுள்ள கோபமும், தனிமையும் ரேஷ்மாவுக்கு முன்னாள் காதலன் குமரனை நியாகப்படுத்தியது. இதையடுத்து, குமரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரேஷ்மா தனது பழைய காதலை புதுப்பித்தார்.

உல்லாசத்துக்கு பிறகு கொலை..
இருவரும் பல சமயங்களில் தனிமையில் சந்திக்கவும் தொடங்கினர். இந்நிலையில், கடந்த அக்டோபர் 22-ம் தேதி குமரனை தனிமையில் சந்திக்க சென்றார் ரேஷ்மா. அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதையடுத்து, ரேஷ்மா தனது வீட்டுக்கு புறப்பட்ட போது, குமரன் அவரை தடுத்து நிறுத்தினார். தன்னை இப்போதே திருமணம் செய்து கொள்ளும்படி ரேஷ்மாவை குமரன் வற்புறுத்தினார். ஆனால், குழந்தை பிறந்த பிறகு தன்னால் வேறொரு திருமணம் செய்துகொள்ள முடியாது என ரேஷ்மா கூறவே, ஆத்திரமடைந்த குமரன் அவரை சரமாரியாக தாக்கினார். பின்னர் கல்லை எடுத்து தலையில் அடித்தும், துப்பட்டாவால் கழுத்தை நெரித்தும் ரேஷ்மாவை குமரன் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பினார்.

கைதான 'எக்ஸ்'
இந்நிலையில், ரேஷ்மா வீட்டுக்கு திரும்பாததால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில், ரேஷ்மாவை போலீஸார் தேடிய போதுதான், வாலாஜாபேட்டை தடுப்பணை அருகே அவரது சடலத்தை போலீஸார் கண்டுபிடித்தனர். மேலும், அவரை கொலை செய்தது யார் என்பதை கண்டுபிடிப்பதற்காக மூன்று தனிப்படைகளும் அமைக்கப்பட்டன. அப்போது, சிசிடிவி கேமராவில் ஒரு இளைஞருடன் ரேஷ்மா சென்றது தெரியவந்தது. பின்னர், ரேஷ்மாவின் பெற்றோரிடம் விசாரித்ததில் அது அவரது பழைய காதலன் குமரன் என அவர்கள் கூறினர். இதையடுத்து, சென்னையில் தலைமறைவாகி இருந்த குமரனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications