மகா சங்கமம் முடிந்ததும் பாண்டியன் ஸ்டோர்ஸில் அதிரடி திருப்பம்.. மயில் எடுத்த முடிவு! சரவணனுக்கு செம பதிலடி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், குடும்ப ரசிகர்களின் ஃபேவரிட் லிஸ்டில் எப்போதும் இருக்கும் ஒன்று. ஆனால் கடந்த சில வாரங்களாக 'அழகே அழகு' சீரியலுடன் மகா சங்கமம் என்ற பெயரில் கதை நகர்ந்தது. கோமதி, மீனா, ராஜி போன்ற சில கதாபாத்திரங்கள் மட்டும் மாறி மாறி காட்சிகளில் வந்தாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு அந்த சங்கமம் சுவாரஸ்யத்தை தரவில்லை என்றே சொல்ல வேண்டும்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
"எப்போ பாண்டியன் ஸ்டோர்ஸ் பழைய டிராக்குக்கு திரும்பும்?" என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இப்போது வந்திருக்கும் அடுத்த வார ப்ரோமோ பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
காரணம்... மயில் - சரவணன் டிராக் இப்போது செம எமோஷனல் டர்ன் எடுத்திருக்கிறது. சரவணனை ஏமாற்றி திருமணம் செய்துகொண்ட விஷயம் தெரிய வந்தபிறகு, மயிலை குடும்பத்திலிருந்து முற்றிலுமாக தள்ளி வைத்தார் சரவணன். "இனி அவளோட நான் வாழ மாட்டேன்" என்று விவாகரத்துக்கும் விண்ணப்பித்துவிட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
இதற்கிடையில் மயிலுக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. ஆனால் இங்கேதான் பெரிய சிக்கல். ஏற்கனவே ஒருமுறை மயில் கர்ப்பமாக இருப்பதாக நினைத்து, கடைசியில் அது உண்மை இல்லை என்று தெரிய வந்ததால், சரவணன் இந்த முறையும் அதை நம்பவே இல்லை. அதுமட்டுமல்லாமல் கோபத்தின் உச்சத்தில், "இந்த குழந்தை என்னோடது இல்லை" என்று மயிலை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். இந்த வார்த்தை மயிலை முற்றிலும் உடைத்துவிட்டது.

மயில் எடுத்த முடிவு
அதற்குப் பிறகு மயில் எடுத்த முடிவு தான் தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. "இனி இந்த குழந்தையை நான் தனியாக பார்த்துக்கறேன்... யாருடைய உதவியும் வேண்டாம்" என்று உறுதியான முடிவெடுத்து, சரவணனுக்கு விவாகரத்தும் கொடுக்க தயாராகிவிட்டார்.
இதே நேரத்தில் இன்னொரு பக்கம் சரவணனின் வாழ்க்கையிலும் ட்விஸ்ட். சமீபத்தில் தன்னுடைய முன்னாள் காதலியை சந்தித்த சரவணன், தன் வாழ்க்கையில் நடந்த பிரச்சனைகள் குறித்து பேசி, "மயிலை விவாகரத்து செய்துட்டு உன்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கறேன்" என்று வாக்குறுதியும் கொடுத்திருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் மயில் கர்ப்பமாக இருப்பது மீனா மூலம் கோமதி குடும்பத்துக்கு தெரிகிறது. "என்ன இருந்தாலும் அது நம்ம வீட்டு வாரிசு" என்று கோமதி உணர்ச்சிவசப்பட, மயிலை மீண்டும் வீட்டுக்கு அழைத்து வர முயற்சி செய்கிறார்கள். ஆனால் மயில் தெளிவாக மறுத்துவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ
இதோ அடுத்த வார ப்ரோமோவில் இன்னும் பெரிய திருப்பம். பாண்டியன், கோமதியிடம், "என்ன இருந்தாலும் அது நம்ம வீட்டுக் குழந்தை. அந்த குழந்தை கஷ்டப்படக்கூடாது. பிரசவ செலவுக்கான பணத்தை கொடுத்து வா" என்று அனுப்புகிறார்.
கோமதியும் மயில் வீட்டுக்குச் சென்று பணத்தை கொடுத்து விட்டு வருகிறார். ஆனால் அங்கு வந்த மயில், தன் அம்மாவின் கையில் பணத்தை பார்த்ததும் விஷயத்தை தெரிந்து கொள்கிறார். அடுத்த நிமிடமே நேராக கோமதி வீட்டுக்குச் சென்று பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு, "என் குழந்தையை நான் பார்த்துக்க தெரியும்" என்று சொல்லிவிட்டு கிளம்புகிறார்.
அசிங்கப்பட்ட சரவணன்
இந்த விஷயம் சரவணனுக்கு தெரிய வர, அவர் நேராக மயிலை சந்தித்து, "இந்த பணம் உனக்காக இல்ல... என் குழந்தைக்காக தான் எங்க அம்மா கொடுத்தாங்க" என்று சொல்கிறார். அதற்கு மயில் கொடுத்த பதில் தான் ப்ரோமோவின் ஹைலைட்.
"இந்த குழந்தை உங்களோடது இல்லைன்னு நீங்களே சொன்னீங்களே... அப்புறம் எப்படி இது உங்க குழந்தை?" இந்த ஒரு கேள்விக்கு சரவணனால் பதில் சொல்ல முடியாமல் தலைகுனிந்து நிற்கிறார்.
இதுவரை அமைதியாக இருந்த மயில் இப்படி தைரியமாக திருப்பி அடித்திருப்பது ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று வருகிறது. இனி சரவணன் உண்மையை உணர்ந்து மயிலுடன் சேருவாரா?
அல்லது இந்த பிரிவு நிரந்தரமா?
அடுத்த வார பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடுகளுக்கு எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications