தூங்குவதில் சிரமமா?.. உங்களுக்கு உதவும் ResMed நிறுவனம்.. தொடங்கியது #WakeUpToGoodSleep பிரச்சாரம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ResMed ஒரு ஆழ்ந்த நல்ல தூக்கத்திற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு #WakeUpToGoodSleep என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த டிஜிட்டல் பிரச்சாரம் நுகர்வோர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு தூக்கக் கோளாறுகள் பற்றிய அறிவை அளிக்கும்.

டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் அதன் தொடர்பான (தூக்கம் மற்றும் சுவாச பராமரிப்பு) கருவிகளின் உலகளவில் முன்னணி நிறுவனமான ResMed நிறுவனம், #WakeUpToGoodSleep. என்ற தூக்கம் பற்றிய புதிய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஒட்டுமொத்த நலனுக்கு தூக்கத்தின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் கருத்தாக்கத்துடன் உருவான இந்த பிரச்சாரம் இந்தியாவில் அதிகரித்துவரும், பெரும்பாலும் அடையாளம் காணப்படாத தூக்கக் கோளாறுகள் மற்றும் அதற்கு இருக்கக்கூடிய சிகிச்சை வாய்ப்புக்களை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 ResMeds WakeUpToGoodSleep campaign may help you have good sleep

இன்று பல இலட்சக்கணக்கான இந்தியர்கள் தூக்கக் கோளாறுகளினால் அவதிப்பட்டுவருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இன்னும் அடையாளம் காணப்படாத நிலையிலேயே இருக்கிறார்கள். மில்லியன் இந்தியர்கள் ஸ்லீப் அப்நீயா (உறக்க மூச்சிடைநிற்பு) நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக லான்ஸெட் ரெஸ்பிரேட்டரி மெடிஸின் ஆய்வின் 2019 ஆம் ஆண்டின் அறிக்கை தெரிவிக்கிறது. சிகிச்சை அளிக்கத் தவறினால், அதன் விளைவாக, மாரடைப்பு, நீரிழிவு, மன அழுத்தம் போன்ற நோய்கள் உட்பட இதர நோய்களும் சேர்ந்து நமது மனம் மற்றும் உடல்நலத்தை சீர்குலைத்துவிடும் வாய்ப்பு இருக்கிறது, அதன் காரணமாக, தூக்கக் கோளாறுகள் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்துவது அத்தியாவசியமாகிறது.

நுகர்வோர் மற்றும் மருத்துவர்கள் மத்தியில் விழிப்புணர்வை மேம்படுத்துவதை இந்த பிரச்சாரம் உறுதிசெய்கிறது. ஒரு கல்வி புகட்டும் சிறு குறும்படத்தை (short educational film) இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ResMed வெளியிட்டிருக்கிறது. ஒரு நல்ல இரவுத்தூக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பொருட்டு, பொதுவாக அறியப்படாத தூக்க பிரச்சினையாக விளங்கும் ஸ்லீப் அப்நீயா (உறக்க மூச்சிடைநிற்பு) பற்றியும், களைப்பு, மன அழுத்தம், எரிச்சல் உணர்வு மற்றும் போக்குவரத்து விபத்துக்கள் உட்பட அதன் பிற விளைவுகள் பற்றியும் அதில் தெளிவாக விளக்கப்பட்டிருக்கிறது.

நோயாளிகள் இரவில் ஒரு நல்ல தூக்கத்தை அனுபவித்து மகிழுவதை உறுதிசெய்யும் பொருட்டு, ResMed தூக்கப்பயிற்சி உதவி வழிமுறை ஒன்றையும் அறிமுகப்படுத்தி, அதன் மூலம், தூக்கப்பிரச்சினையால் வாடும் நோயாளிகளின் தூக்க அனுபவத்தின் ஒவ்வொரு படிநிலைகளிலும் தொலைவிலிருந்து இயங்கிபடியே வழிநடத்துகிறது.

 ResMeds WakeUpToGoodSleep campaign may help you have good sleep

வீட்டு உறக்க பரிசோதனை மூலம் ஸ்லீப் அப்நீயாவை கண்டறிதலில் தொடங்கி, ஸ்லீப் அப்நீயா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இருக்கக்கூடிய CPAP (தொடர்ந்த நேர்மறையான மூச்சுப்பாதை அழுத்தம்) போன்ற சிகிச்சை முறைகள் பற்றி அறிந்துகொள்வதையும் உறுதி செய்கிறது. அத்துடன் கூடுதலாக, அந்தக் கருவிகளை பிரச்சினைகள் ஏதுமின்றி பொருத்திக்கொள்வதற்கும் , மற்றும் மாதாந்திரத் தவனைத் திட்டம் (EMI) உட்பட அந்தக் கருவிகளுக்கு வழங்கக்கூடிய மிகச்சிறந்த தள்ளுபடிகள் போன்றவற்றையும் வழங்கி அவர்களுக்கு உதவுகிறது.
"ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு இந்தியாவில் அதிகரித்துவரும் இந்த வேளையில், உணவுமுறை மாற்றம், தினசரி உடற்பயிற்சி மற்றும் மன நலம் ஆகியவற்றுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இருப்பினும் முழுமையான உடல் ஆரோக்கியத்துக்கு மூல காரணமாக விளங்கும் தூகத்துக்கு அதற்குத் தகுந்த முக்கியத்துயம் அளிக்கப்படுவதில்லை" என்று ResMed ஆசிய மற்றும் லத்தீன் அமெரிக்காவின் நேஷனல் மார்க்கெட்டிங் தலைவரான சீமா அரோரா கூறினார். "1.3 பில்லியன் மக்கள் தொகைக்கு மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே தூக்கத்திற்கான பரிசோதனைக் கூடங்கள் அமையப்பெற்று, இந்தியாவைப் போன்ற பரந்த நிலப்பரப்பை கொண்ட ஒரு நாட்டில் தூக்கப் பிரச்சினைகள் குறித்த கருத்துரையாடல் மிகக் குறைந்த அளவிலேயே மேற்கொள்ளப்படுகிறது. தூக்க சிகிச்சையில் முன்னோடியாக விளங்கும் RedMed இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் வழியாக, தூக்கப்பிரச்சினைகள் நமது முழுமையான ஆரோக்கியத்துக்கு எவ்வாறு பாதிப்புக்களை விளைவிக்கிறது என்பதை வலியுறுத்தும் விதமாக 'நன்றாக தூங்கினால் அந்த நாளே சிற்ப்பாக இருக்கும்' .என்ற எளிய எண்ணத்தை விதைத்து மருத்துவர்கள் சமூகம் உட்பட இந்தியர்கள் மத்தியில் விழிப்புணர்வை பரப்புவதை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளது."

மருத்துவர்கள் சமூகத்தினரிடையேயும் தூக்கம் பற்றிய விழிப்புணர்வை ஊட்டி கல்வியறிவை "வளர்க்கும் முயற்சியுடன் இந்தியாவின் தலைசிறந்த தூக்க சிகிச்சை நிபுணர்களான மருத்துவர் மன்வீர் பாட்டியா மற்றும் அவரது தூக்க சமூகமான ASSM ஏஸ் ஸ்கூல் ஆஃப் ஸ்லீப் சயின்ஸ், மற்றும் மருத்துவர். சுஜித் ராஜன் போன்ற சிலரைக் கொண்டு ResMed வலைத்தள கல்வி தொடர்களை வழங்கிவருகிறது.

"ஐந்திலிருந்து பத்து சதவிகித இந்தியர்கள் தூக்கப் பிரச்சினையால் அவதியுறுகிறார்கள். ஆனால் அது அவர்களின் ஆரோக்கியத்தை எவ்வளவு தூரம் பாதிக்கிறது என்பது பற்றி அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை" என்று இந்தியாவின் தலைசிறந்த தூக்க சிகிச்சை நிபுணரான மருத்துவர் மன்வீர் பாட்டியா கூறினார். "நாம் வாழ்நாளின் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில் கழிக்கிறோம், அது வழக்கமான நாம் எடுத்துக்கொள்ளும் ஓய்வைவிட எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை வலியுறுத்துகிறது. அது குறிப்பாக உடல், மனம் மற்றும் உணர்வுகளின் முழுமையான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவி செய்து உடல் தன்னைத்தானே குணப்படுத்திக்கொள்ள வழிவகுக்கிறது தூக்கம் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது தற்போது அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. அப்போதுதான் நமது முழுமையான ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியம் என்பதை ஒவ்வொருவரும் கருத்தில் கொள்வார்கள் மற்றும் இதர மருத்துவ பிரச்சினைகளுக்கும் அது தொடர்புடையதாக விளங்குவதை அவர்கள் அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களுக்கு பயிற்சி அமர்வுகள் நடத்துவது, பொதுமக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தூக்க பயிற்சியாளர் உதவி போன்றவற்றை மேற்கொள்வதன் மூலமாக இந்தக் விழிப்புணர்வை ஏற்படுத்துவத்தில் நாம் வெற்றி காணலாம்." என்று அவர் மேலும் கூறினார்.

சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அத்தியாவசியமாவதால், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருகை தராது சிறப்பான நோயாளி பராமரிப்பை வழங்குவதற்கு RedMed இன் நூதனமான மற்றும் இணைக்கக் கூடிய தூக்க பிரச்சினைத் தீர்வுகள் வழி செய்கிறது. அதன் பிணையத்தில் கிளவுட் இணைப்புக்கொண்ட 10 மில்லியனுக்கும் அதிகமான கருவிகள் தங்களது நோயாளிகளை தொலைவிலிருந்தே கண்காணிக்கும் வசதியை மருத்துவர்களுக்கு அளிக்கிறது, நோயாளிகள் தங்கள் பங்குக்கு அவர்களின் ஆரோக்கியம் குறித்த தரவுகளை பகிர்ந்து, நோயை கண்டறிந்து அவர்களின் தூக்கப் பிரச்சினைகளுக்கு சிகிச்சை பெறலாம்.

தூக்க பயிற்சியாளர் உதவி முன்பதிவிற்கு அல்லது தூக்க பரிசோதனை மேற்கொள்ளப்படுவதற்கு 1800-103-3969 என்ற இந்த கட்டணமற்ற தொலைபேசி எண்ணுக்கு உடனே அழையுங்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+