மனைவி பிகினி உடை அணிய 418 கோடி ரூபாய் செலவு செய்த துபாய் தொழிலதிபர்
ரியாத்: பிகினி உடையை மனைவி அணிய விரும்பியதால் ரூ 418 கோடிக்கு தனித் தீவையே துபாய் தொழிலதிபர் வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே அவர்கள் இருவரும் அதிக விலை கொண்ட பெர்ராரி கார், ஆடம்பர ரக உணவுஸ விலையுயர்ந்த பொருட்களை வாங்கி பல வீடியோக்களை பதிவிட்டுள்ளனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் சவுதி அல் நடாக் (26). துபாய்க்கு படிக்கச் சென்றபோது தொழிலதிபரான ஜமால் அல் நடாக் என்பவரை சந்தித்திருக்கிறார். இவர்களுக்கு காதல் மலர்ந்தது. இவர்கள் இருவரும் 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமும் செய்து கொண்டனர்.

தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட பின்பு, இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூகவலைதளங்களில் தன்னுடைய ஆடம்பர வாழ்க்கை முறையை வீடியோவாக வெளியிட்டிருந்தனர்.
இதனால்தான் இருவரும் பிரபலமடைந்தனர். ரூ 8.36 கோடி மதிப்பிலான வைரம் ஒன்றை வாங்கியிருந்தனர். அது போல் ரூ 16 கோடி மதிப்பிலான கலை படைப்பையும் அந்த தம்பதி வாங்கியிருந்தனர். அது போல் அதிக விலை கொண்ட ஃபெர்ராரி கார், ஆடம்பர உணவு, முதல் வகுப்பு விமான பயணம், ஆடம்பர காபி உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் வாங்கியிருந்தனர். அதை வீடியோவாகவும் போட்டிருந்தனர்.
இந்த நிலையில் சவுதியில் அந்த பெண் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: கடற்கரையில் நான் தளர்வான ஆடைகளை அணிந்தபடி இருக்க விரும்பினேன். ஆனால் அந்த ஆடையில் இருக்கும் போது பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். அதனால் என்னுடைய கணவர் கடற்கரை ஒன்றையே விலைக்கு வாங்கிவிட்டார்.
ஏதேனும் முதலீட்டு காரணங்களுக்காகவும் நாங்கள் செலவு செய்வது என திட்டமிட்டிருந்தோம். நான் பிகினி ஆடையில் குளிக்க நினைத்தேன். அதற்காக தீவையும் வாங்கிவிட்டார் என்றார். பாதுகாப்புக்காக அந்த தீவு பற்றிய விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. அந்த தீவு ஆசியாவில் உள்ளது. அதன் விலை இந்திய மதிப்பில் ரூ 418 கோடி ஆகும்.
அது எந்த இடம் என அறிவிக்கவிட்டாலும் இன்ஸ்டாகிராம் பதிவுகளை வைத்து அது எந்த பகுதியில் உள்ளது என்பதை பலர் தேடி வருகிறார்கள். இவரது கணவரை இன்ஸ்டாவில் பலர் பாராட்டி வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சவுதி அல் நடாக்கின் பிறந்தநாள் அன்று அவரது கணவர் ரூ 60 லட்சம் மதிப்பிலான பொருட்களை பரிசாக கொடுத்ததாக வீடியோ வெளியிட்டிருந்தார்.
சவுதி அல் நடாக் ஷாப்பிங் செய்வதற்காக ரூ.12 லட்சம் செலவழித்தாகவும், கணவருடன் ரூ.1 லட்சம் செலவழித்து இரவு விருந்து சாப்பிட்டதாகவும், ஹெர்ம்ஸ் பிராண்ட்டின் ஷோரூமில் ரூ.29 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் வாங்கியதாகவும் அந்த பெண் அந்த வீடியோவில் தெரிவித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் அந்த கணவர் தனித்தீவை வாங்கிக் கொடுத்ததால் அவர் இந்த ஆண்டின் சிறந்த கணவர் என்று இணையத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications