சவுதி வானில் அடுத்த அதிர்ச்சி! பீதியில் அஞ்சி ஓடும் பொதுமக்கள்! வளைகுடா நாட்டில் எதிர்பாராத பாதிப்பு
ரியாத்: ஆண்டு முழுக்க எப்போதும் வெயில்படுத்தி எடுக்கும் சவுதி அரேபியாவில், இப்போது வானிலை தலைகீழாக மாறியுள்ளது. தலைநகர் ரியாத் முதல் புனித நகரான மெக்கா வரை கொட்டித் தீர்க்கும் கனமழை மற்றும் திடீர் வெள்ளம், அந்த நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த திடீர் மழையால் அந்நாட்டு மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
வளைகுடா நாடுகளில் ஒரு பக்கம் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இஸ்ரேல், ஈரான் நாடுகள் மாறி மாறி தாக்கிக் கொள்வதைத் தற்காலிகமாக நிறுத்தியிருந்தாலும் எப்போது வேண்டும் என்றாலும் மீண்டும் போர் வெடிக்கும் என்ற சூழலே இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த உலக நாடுகளுமே வளைகுடாவையே உற்றுக் கவனித்து வருகிறது.

சவுதி
இந்தச் சூழலில் தான் மற்றொரு அரபு நாடான சவுதிக்கும் பிரச்சனை வெடித்துள்ளது. ஈரானில் வானில் இருந்து ஏவுகணைகள் தாக்கும் நிலையில், சவுதியில் வானில் இருந்து மழை கொட்டி தீர்க்கிறது. அங்குக் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத மழை கொட்டும் சூழலில், பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாகச் சவுதி அரேபியாவின் ரியாத், மக்கா, நஜ்ரான், மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகக் கனமழை கொட்டி தீர்க்கிறது. இது அங்குள்ள சாலைகளை ஆறுகளாக மாற்றியுள்ளது. ரியாத் நகர வீதிகளில் கார்கள் வெள்ளத்தில் மிதக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகீர் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது.
அதிரடி உத்தரவுகள்
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த சவுதி அரசு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. கனமழை பாதிப்பு அதிகம் உள்ள கிழக்கு மாகாணம் மற்றும் அசிர் பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. வானிலை மாற்றத்தைப் பொறுத்து இந்த விடுமுறை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாயிஃப் பல்கலைக்கழகம் (Taif University) மற்றும் கிங் சவுத் பல்கலைக்கழகத்தின் சில வளாகங்களில் வகுப்புகள் ஆன்லைன் கிளாஸ்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.
மழை முடியாது
ஏற்கனவே இந்த கனமழையால் சவுதி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த மழை முடியாது என்றே வானிலை மையம் கூறியுள்ளது. ஜாசன், அசிர், அல்-பாஹா ஆகிய பகுதிகளில் பலத்த இடி, மின்னல் மற்றும் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என சவுதி தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அரேபிய வளைகுடா பகுதியில் மணிக்கு 45 கி.மீ வேகத்திலும், செங்கடல் பகுதியில் மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் பலத்த காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Heavy, very heavy rain in Riyadh just now. #saudiarabia #riyadh #riyadhseason pic.twitter.com/DwuleKROcN
— Vivek kadan (@Vivek_k_kadan) April 11, 2026
மிக மோசமான பாதிப்பு
இந்த கனமழையால் அங்கு நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அந்நாட்டு அரசு சுமார் 143 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 25 அதிவிரைவு மீட்புக் குழுக்களைக் களமிறக்கியுள்ளது. வெள்ளம் பாதிக்கும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும்; அவசரக் காலங்களில் எமெர்ன்சி நம்பரைத் தொடர்பு கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தண்ணீருக்காகத் தவம் கிடந்த பாலைவனத் தேசத்தில், இப்போது தண்ணீர் அதிகமாகித் தத்தளிக்கும் நிலை! அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கு எதுவுமே விதிவிலக்கு இல்லை!
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications