Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐக்கிய அமீரகத்தின் கோல்டன் விசா.. ரூ.23 லட்சம் கட்டினாலும் எல்லாருக்கும் கிடைக்காது! ரூல்ஸ் என்ன

Subscribe to Oneindia Tamil

ரியாத்: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா இப்போது புதிய நீண்ட கால கோல்டன் விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் கீழ் இப்போது AED 1,00,000 (சுமார் 23.30 லட்சம் ரூபாய்) செலுத்தினால் இந்தியர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை கிடைக்கும். அப்போது சுமார் 23.30 லட்சம் செலுத்தினால் யார் வேண்டுமானாலும் கோல்டன் விசாவை வாங்க முடியுமா என்பதே பலருக்கும் இருக்கும் கேள்வி.. இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.!

இந்தியாவில் இருந்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்ச எண்ணிக்கையில் இந்தியர்கள் செல்கிறார்கள். பெரும்பாலும் வேலைக்காகவே மத்தியக் கிழக்கு நாடுகளுக்குச் செல்கிறார்கள். அதுபோல சென்று நீண்ட காலம் இருப்போருக்கு நல்ல செய்தியாகவே இப்போது அந்நாட்டு அரசு கோல்டன் விசா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

UAE Golden Visa Why 23 Lakh Isn t Enough for Most Indians What is the Eligibility

ரூ.23 லட்சம் போதும்

இந்தச் சூழலில் தான் ஐக்கிய அமீரகம் AED 100,000 (சுமார் 23.30 லட்சம் இந்திய ரூபாய்) செலுத்தினால் கோல்டன் விசா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், பணம் மட்டுமே இதற்குப் போதாது.. இந்த நீண்ட காலக் குடியுரிமை அனுமதி ஒருவருக்குக் கிடைக்கப் பல காரணங்கள் உள்ளன. ஒருவரின் தொழில், சமூகத்திற்கான பங்களிப்பு மற்றும் பொருளாதார மதிப்பு எனப் பல விஷயங்களைக் கணக்கில் கொண்டே விசாவை வழங்குவார்கள். அடுத்த 3 மாதங்களில் 5,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்த விசாவுக்கு விண்ணப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..

ஒப்புதல் பெறலாம்

முதற்கட்டமாக இந்த விசா திட்டத்திற்கு இந்தியாவும் வங்கதேசமும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இந்தச் செயல்முறை ரயாத் குழுமக் கவனிக்கும். இந்த வகையின் கீழ், விண்ணப்பதாரர்கள் துபாய் செல்லாமலேயே இங்கிருந்தபடி ஒப்புதல் பெறலாம். இருப்பினும், விண்ணப்பதாரர் கலாச்சாரம், நிதி, வர்த்தகம், அறிவியல், ஸ்டார்ட்அப்கள் அல்லது தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட துறைகள் மூலம் ஐக்கிய அமீரகத்தின் பொருளாதாரத்திற்கு எப்படிப் பங்களிப்பார்கள் என்பது சோதனை நடத்தப்படும்.

அருமையான வாய்ப்பு

இது தொடர்பாக ரயாத் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ரயாத் கமல் அயூப் கூறுகையில், "கோல்டன் விசா பெற இது ஒரு பொன்னான வாய்ப்பு. ஒருவர் கோல்டன் விசாவுக்கு விண்ணப்பிக்கும் போது அவர்களின் பின்னணியை நாங்கள் முதலில் சரிபார்ப்போம். பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனரா.. கிரிமனல் தொடர்பு இருக்கிறதா என விரிவான சோதனை நடத்தி அதை ஐக்கிய அமீரகத்திற்கு அனுப்பிவிடுவோம். கோல்டன் விசா குறித்த இறுதி முடிவை ஐக்கிய அமீரகம் எடுக்கும்" என்றார்,

5 வகை விசா

முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர், வல்லுநர்கள் அல்லது மாணவர்கள் எனப் பல பிரிவினருக்கும் கோல்டன் விசா இருக்கிறது. அவற்றுக்குத் தனித்துவமான ஆவணங்கள் மற்றும் ஒப்புதல் தேவைகள் உள்ளன. இது குறித்து நாம் விரிவாக பார்க்காமல்.

முதலீட்டாளர்கள்: ஐக்கிய அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட நிதி அல்லது சொத்தில் AED 2 மில்லியன் (சுமார் ரூ. 4.67 கோடி) முதலீடு செய்ய வேண்டும். அதுவும் சொந்தப் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். கடன் வாங்கி முதலீடு செய்யக்கூடாது. உரிய மருத்துவக் காப்பீட்டை வைத்திருக்க வேண்டும் மற்றும் 10 ஆண்டு விசாவுக்கு தகுதி பெற ஆண்டுதோறும் ஐக்கிய அமீரகத்திற்கு வரியாக AED 250,000 செலுத்த வேண்டும்.

தனித்தனி ரூல்ஸ்

தொழில்முனைவோர்: தொழில்நுட்பம் அல்லது புதுமை துறையில் AED 500,000 (சுமார் ரூ. 1.17 கோடி) மதிப்புள்ள பிஸ்னஸை நடத்த வேண்டும். இதற்கு ஆடிட்டரிடம் உரிய அனுமதி பெற வேண்டும்

சிறப்பு வல்லுநர்கள்: மருத்துவர்கள், விஞ்ஞானிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்ற வல்லுநர்களுக்கு அது தொடர்பான ஐக்கிய அமீரகத்தின் அமைப்புகளிடமிருந்து ஒப்புதல் தேவை. குறைந்தபட்சம் AED 50,000 (சுமார் ரூ. 11.7 லட்சம்) சம்பளம் பெறுவாராக இருக்க வேண்டும். மேலும், ஐந்து வருட அனுபவக் கடிதத்தையும் சமர்ப்பிக்க வேண்டும்.

மாணவர்களுக்கும் இருக்கு

மாணவர்கள்: 95% அல்லது அதற்கு அதிகமான மார்க் பெற்ற உயர்நிலைப் பள்ளி டாப்பர்கள் அல்லது சர்வதேச கல்வி நிறுவனங்களின் சிறந்த GPAகளுடன் தேர்ச்சி பெறும் பல்கலைக்கழக மாணவர்கள் 5-10 ஆண்டு விசாவுக்கு தகுதி பெறலாம்.

தொண்டு நிறுவன ஊழியர்கள்: அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளால் நீண்டகாலம் சேவை செய்திருக்க வேண்டும். இதற்கு உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஐக்கிய அமீரகப் பொருளாதாரத்திற்கு அதிகபட்சம் பங்களிக்கும் நபர்களுக்கே கோல்டன் விசாவை தர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்பவே இந்த விசா திட்டங்களை உருவாக்கியுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது?

சரியான பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.. நீங்கள் எந்தப் பிரிவின் கீழ் வருகிறீர்கள் என்பதை அடையாளம் காணவும் - முதலீட்டாளர், தொழில்முனைவோர், நிபுணர், மாணவர் என எந்தப் பிரிவோ அதற்கேற்ப விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.. ஒப்புதல் கடிதங்கள், நிதி பதிவுகள், அனுபவச் சான்றிதழ்கள் மற்றும் சரியான பாஸ்போர்ட் நகல்கள் உள்ளிட்டவை தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+