டெல்லியில் வங்கிப் பணம் ரூ. 22.5 கோடி கொள்ளை? ஓட்டம் பிடித்த வேன் டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு
டெல்லி: டெல்லியில் தனியார் வங்கியின் பணத்தை எடுத்துச் சென்ற வேன் டிரைவர் ரூபாய் 22.5 கோடியுடன் தப்பித்துச் ஓடியுள்ள சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பிச் சென்ற டிரைவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் வங்கி ஒன்று தெற்கு டெல்லியில் தனது வங்கிக் கிளைக்கு பணத்தை கொண்டு செல்வதற்காக வினய் பட்டேல் என்ற துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் மற்றும் பிரதீப் சுக்லா என்ற டிரைவருடன் அனுப்பி வைத்தது. இருவரும் ரூ.22.5 கோடி பணத்துடன் வண்டியில் சென்று கொண்டிருந்தனர்.

கோவிந்த்புரி மெட்ரோ ரெயில் நிலையம் அருகே சென்றபோது, பாதுகாப்புக்காக துப்பாக்கியுடன் சென்ற காவலாளி வினய் பட்டேல், சிறுநீர் கழிப்பதற்காக வேனை விட்டு இறங்கியுள்ளார். பின்னர், அருகில் ஒரு வளையில் காத்திருப்பதாக சொல்லி அந்த டிரைவர் வண்டியை எடுத்துள்ளார். இதனையடுத்து, துப்பாக்கி ஏந்திய அந்த பாதுகாவலர் திரும்பி வந்து பார்த்த போது பிரதீப் சுக்லா என்ற அந்த டிரைவரையும் வண்டியையும் காணவில்லை.
இதுகுறித்த தனியார் வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டபோது, அருகில் இருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் வேனை போலீசார் மீட்டனர். ஆனால் வேனில் இருந்த பணத்துடன் டிரைவர் தப்பிச் சென்றார். பணத்துடன் மாயமான டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். டெல்லியில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மத்திய அரசின் புதிய சேவை.. உங்கள் பணம், உங்கள் கையில்.. இனி ஒரு ரூபாய் கூட மிஸ் ஆகாது! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications