இந்தியாவை இந்து ராஷ்டிரா என பிரகடனம் செய்ய மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் சாமியார்கள்!
பிரக்யாராஜ்: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் சாமியார்கள் அல்லது அகோரிகளின் சம்மேளனமானது இந்தியாவை இந்து ராஷ்டிரா என மத்திய அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிற உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் அண்மையில் சாமியார்களின் சம்மேளனம் நடைபெற்றது. இதில் அகோரி சாமியார்களின் அமைப்புகளான அகாடாக்களின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
ஹரித்வார் பொதுக்கூட்டத்தில் பேசிய அகோரி சாமியார்கள் பலரும், முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும்; முஸ்லிம்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என அப்பட்டமாக பேசினர். மேலும் இந்துக்களைப் பாதுகாக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போல ஒருவர் அதாவது இந்து பிரபாகரன் உருவாக வேண்டும் எனவும் அவர்கள் பேசியிருந்தனர்.

இந்து ராஷ்டிரா
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தின் பிரக்யாராஜ் நகரிலும் சாமியார்கள் சம்மேளனம் நடைபெற்றது. இதிலும் அகோரி சாமியார்களின் அகாடாக்களைச் சேர்ந்த மடாதிபதிகள் பலரும் பங்கேற்று பேசினர். இந்த கூட்டத்தில் சாமியார்கள் பேசியதாவது: இந்தியாவை இந்துக்களின் நாடாக அல்லது இந்து ராஷ்டிரமாக மத்திய அரசு பிரகடனப்படுத்த வேண்டும். அப்படி மத்திய அரசு பிரகடனப்படுத்தாவிட்டால் இனி நாங்கள் இந்து ராஷ்டிரா என்றே பேசுவோம்; எழுதுவோம்.

முஸ்லிம்கள் எதிர்ப்பு பேச்சு
முஸ்லிம்களின் புனித ஜிஹாத் இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. சீனாவைப் போல கடுமையான தடைகளை விதிக்க வேண்டிய தருணம் இது. அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை கொடுக்க வேண்டும்; மடங்களையும் கோவில்களையும் அரசுகள் கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொள்வதை நிறுத்த வேண்டும். கோவில்களையும் மடங்களையும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தால் தேவாலயங்களையும் மசூதிகளையும் அதேபோல் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.

ஓவைசி மீது ஏன் நடவடிக்கை இல்லை?
பள்ளி பாடப் புத்தகங்களில் பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு போன்றோர் வாழ்க்கை வரலாறுகள் இடம்பெற வேண்டும். கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். ஹரித்வார் சம்மேளனத்தில் பேசியதற்காக சாமியார்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். சனாதன தர்மத்துக்கு எதிராக அறைகூவல் விடுத்து மாநாடு நடத்துபவர்கள் மீது ஏன் நடவடிக்கை பாயவில்லை? ஓவைசி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து பேசுகிற வீடியோக்கள் வெளியான பின்னரும் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லையே ஏன்?

முஸ்லிம் மக்கள் தொகை
1947-ல் நாடு பிரிவினையின் போது 9 கோடி முஸ்லிம்கள் இருந்தனர். இன்று முஸ்லிம்களின் மக்கள் தொகை 40 கோடியாக உயர்ந்துள்ளது. அப்துல் கலாம் போன்ற முஸ்லிம்களை நாங்கள் மதிக்கிறோம். இந்துக்கள் ஜாதியால், வர்க்கத்தால் பிளவுபட்டு நிற்காமல் அனைவரும் ஒன்றுபட வேண்டும். நாட்டின் பெரும்பாலான முஸ்லிம்கள் இந்துக்களை மதமாற்றம் செய்கின்றனர். இவ்வாறு சாமியார்கள் பேசினர்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications