மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.. 15,000 கன அடி நீர் திறப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை
சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் மேட்டூரில் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. முன்னதாக கோடை காலத்திலேயே விடாமல் மழை பெய்து வந்தது. அப்போது குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து மே 24ஆம் தேதி அன்று நீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார். சுதந்திரம் அடைந்த பின் இதற்கு முன் இப்படி மே 24ம் தேதியே ஒருமுறை கூட மேட்டூர் அணை திறந்து விடப்பட்டது இல்லை. அதாவது கடந்த 60 வருடங்களில் ஒருமுறை கூட மேட்டூர் அணை இவ்வளவு சீக்கிரம் திறக்கப்பட்டது இல்லை.
தற்போது தென் மேற்கு பருவமழை காரணமாக மேட்டூர் அணைக்கு மேலும் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துக் கொண்டே வந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பியதால் அங்கிருந்து நீர் வெளியேற்றப்பட்டதும் இந்த அதிக நீர் வரத்திற்கு காரணம் ஆகும். இதையடுத்து நேற்று இரவு மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது. மேட்டூர் ஆணை வரலாற்றில் 68வது முறையாக அணை 100 அடியை எட்டியுள்ளது.
அதோடு அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 60 ஆயிரம் அடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 98.20 அடியாக உள்ளது. நீர் இருப்பு 62.53 டிஎம்சியாக உள்ளது. மேலும் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக அதிகரித்தது. இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்துக்காக 15,000 கன அடி நீர் மேட்டூரில் திறக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நீர் பாசன பகுதிகளில் ஆற்றின் கரையோரங்களில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications