சேலத்தில் கனமழை.. வீட்டில் புகுந்த மழைநீரில் மூழ்கி இரு மூதாட்டிகள் பலி
சேலம்: சேலம் நான்கு ரோடு பகுதியில் வீட்டிற்குள் புகுந்த மழைநீரில் மூழ்கிய இரு மூதாட்டிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சேலத்தில் நேற்று இரவு பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது.
மேலும் ஏற்காட்டில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்காட்டில் இருந்து வரும் மழைநீர் ஆனது சேலம் நான்கு ரோடு அருகில் உள்ள பிரதான ஓடையில் திறந்து விடப்படும்.

ஓடை
இந்த நிலையில் அந்த ஓடையானது தூர்வாரப்படாமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழை நீர் முழுவதும் சாலையில் வெளியேறி நான்கு ரோடு அருகே உள்ள கோவிந்த கவுண்டர் தோட்டம் பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் உள்ள 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

வீட்டின் வெளியே
மேலும் வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு கார்கள் ஆகியவை மழை நீரில் மூழ்கியது. இதனால் இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் உறங்க இடமின்றி வீட்டில் மொட்டை மாடியில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

சாக்கடைப் பணிகள்
இப்பகுதியில் உள்ள சாக்கடைப் பணிகள் முழுமை பெறாதாலும் ராட்சத ஓடை தூர்வாரப்படாததாலும் இது போன்ற அவலம் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் நாங்கள் சந்திப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை பொதுமக்கள் வெளியேற்றி வருகின்றனர்.

விரைந்து நடவடிக்கை
மேலும் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த ராட்சத ஓடையை தூர்வாரி சாக்கடை பணியில் விரைவில் முடிக்க வேண்டும் என அப்போது மக்கள் கோரிக்கையாக உள்ளது. இந்த நிலையில் கோவிந்த கவுண்டர் தோட்டம் பகுதியில் 70 வயது மூதாட்டி ருக்மணி மற்றும் சாமிநாதபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் தெரு பகுதியில் 80 வயது மூதாட்டி பழனியம்மாள் ஆகியோர் வீட்டிற்குள் புகுந்த மழை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications