சேலத்தில் நமீதா பங்கேற்ற நிகழ்ச்சி.. அரசு சின்னத்தை தவறாக பயன்படுத்திய 2 பேர் கைது.. திடுக் தகவல்
சேலத்தில் நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் மற்றும் வங்கி அலுவலர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அரசு சின்னம் தவறாக பயன்படுத்தப்பட்டதாக எழுந்த புகாரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சேலத்தில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சிறு தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி அக்டோபர் 30ம் தேதியான நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியினை எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் மற்றும் 6வது எடிஷன் எம்எஸ்எம்இ ஸ்கேலப் என்ற தனியார் நிறுவனம் நடத்தியது.
எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் அமைப்பின் தேசிய தலைவராக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துராமன் என்பவரும், அதேபோல் அந்த அமைப்பின் தேசிய செயலாளராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் என்பவரும் இருக்கிறார்கள். இந்த அமைப்பில் பாஜக நிர்வாகியும், நடிகையுமான நமீதாவின் கணவர் சவுத்ரி தமிழ்நாடு பிரிவின் தலைவராக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சேலத்தில் எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் நேற்று நடத்திய கூட்டத்தில் நடிகை நமீதா, நமீதாவின் கணவர் சவுத்ரி மற்றும் வங்கி அலுவலர்கள் தொழில் முனைவோர் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். சிறு தொழில் முனைவோருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அரசு முத்திரை தவறாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ளது,
எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் நிறுவனம் ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதாக சேலம் போலீசில் புகார் எழுந்தது. இதையடுத்து சூரமங்கலம் போலீசார் எம்எஸ்எம்இ ப்ரோமோஷன் கவுன்சில் அமைப்பின் தேசிய தலைவராக உள்ள முத்துராமன் மற்றும் அமைப்பின் தேசிய செயலாளராக பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த துஷ்யந்த் யாதவ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.
காவல்துறை விசாரணையில் தேசிய தலைவராக உள்ள முத்துராமன் என்பவர் 3 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். முத்துராமன் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார் இவருக்கு டெல்லி செல்லும்போது பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ்யுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு இந்த அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு தன்னுடைய விசிட்டிங் கார்டு மற்றும் சொகுசு காரில் அசோக சின்னம் மற்றும் தேசியக் கொடியை முத்துராமன் பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது,.
இதனிடையே பஞ்சாப்பை சேர்ந்த துஷ்யந்த் யாதவ்வை விசாரித்த போது, டிகிரி முடித்தவர் என்பதும், முத்துராமனுடன் சேர்ந்து கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு இந்த அமைப்பை பதிவு செய்து வங்கி அலுவலர்களை அழைத்து தொழில் முனைவோர்களுக்கு இதுபோன்ற நிகழ்ச்சி நடத்தி வந்ததும் தெரியவந்தது. முதலில் சென்னை, மதுரை தற்போது சேலத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
இருவரும் தேசியக் கொடி மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பண மோசடி செய்தார்களா என்று விசாரித்து வருகிறார்கள். குற்றச்செயல் ஈடுபட்டுள்ளனரா? என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications