தள்ளாடிய ஆர்த்தி.. கை நரம்புகளை அறுத்து.. கழுத்தை நெரித்து உயிரிழந்த மூவர்.. சேலத்தில் ஒரு சோகம்
சேலம் ஹோட்டலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
Recommended Video

சேலம்: கதவை உடைத்து திறந்தால்.. ஆர்த்தி தள்ளாடியபடியே நின்று கொண்டிருக்கிறார்! ஜூஸில் விஷம் கலந்து குடித்தும்.. கை நரம்புகளை அறுத்தும்.. கழுத்து நெரிக்கப்பட்டும்.. தூக்கிட்டும் 3 பேர் மிக கொடூரமாக ரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கிறார்கள்! சேலத்தில்தான் இப்படி ஒரு பயங்கரம் நடந்துள்ளது!
சென்னை சூளைமேடு பாலாஜி பவன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அனுராதா. இவர்களுக்கு ஆர்த்தி, ஆஷிகா என்று இரண்டு மகள்கள். ஆர்த்தி வயது 22, ஆஷிகாவுக்கு 20! ஆர்த்தி, பி.ஏ., ஆங்கில இலக்கியமும், ஆஷிகா, என்ஜினியரிங் 3-ம் ஆண்டும் படித்து வந்தனர்.
விஜயகுமார் கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். இவர்கள் சில தினங்களுக்கு முன்பு சேலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் வந்து ரூம் எடுத்து தங்கினார்கள்.

கதவை திறங்க
இந்நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் ஹோட்டல் ரிசப்ஷனுக்கு ஆர்த்தி போன் செய்து, எங்க ரூம் கதவு திறக்க முடியவில்லை. வந்து திறந்து விடுங்கள் என்று சொன்னார். ஊழியர்களும் கதவை உடைத்து கொண்டு உள்ளே போனால், ஆர்த்தி தடுமாறிய நிலையில் இருந்தார்.

கூல் டிரிங்ஸ்
விஜயகுமார், அனுராதா, ஆஷிகா 3 பேரும் சடலமாக கிடந்தனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. விசாரணையும் வேகமாக ஆரம்பமானது. உயிரிழந்த 3 பேரும் கூல்டிரிங்ஸில் பூச்சி மருந்தை கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

ரத்தப்போக்கு
இறந்தவர்களில் ஒருவரான ஆஷிகா, கையில் பிளேடால் அறுத்துள்ளார். அவர் படுத்திருந்த படுக்கை மற்றும் உடை முழுவதும் ரத்தம் பரவி இருந்தது. அதிலிருந்து அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால்தான் அவர் இறந்திருக்கலாம் எனத் தெரியவருகிறது.

நரம்புகள்
ஆனால் அப்படியும் ஆர்த்தி மட்டும் சாகவில்லை போல தெரிகிறது. அதனால் கை நரம்புகளை அறுத்துள்ளார். கழுத்தும் நெரிக்கப்பட்டுள்ளது. விஷம் குடித்தும் சாகாததால், தூக்கிட்டும், கை நரம்புகளை அறுத்தும் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.

கந்துவட்டி
உடனடியாக ஆர்த்தியை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அந்த அறையில் ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில் கந்துவட்டி கொடுமை காரணமாக ஊரைவிட்டே வந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரம்
மேலும் தற்கொலை எப்படி செய்து கொண்டோம் என விரிவாக எழுதி வைத்திருப்பதாக ஆர்த்தி தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இது சம்பந்தமாக விசாரணையிலும் ஈடுபட்டுள்ளனர். இப்படி ஒரு கொடூரமான தற்கொலை சம்பவத்தினால் சேலம் மக்கள் உறைந்து போய் உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications