50% மானியத்துடன் கொட்டகையில் கோழிப்பண்ணை.. 625 சதுர அடி நிலமுள்ள சேலம் விவசாயிகளுக்கு குட் நியூஸ்
சேலம்: விவசாயம் பொய்த்துப்போய், கால்நடைகளை மட்டுமே நம்பி வாழ்வாதாரத்தை எதிர்நோக்கியிருக்கும் விவசாயிகளுக்கு, அரசு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளது.. சிறிய அளவில் மற்றும் 100 நாட்டுக்கோழிப் பண்ணை வைத்து தொழிலைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்குத் அரசு தரப்பில் 50% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது, விவசாயிகளின் பேராதரவை பெற்று வருகிறது.
சேலம்: விவசாயம் பொய்த்துப்போய், கால்நடைகளை மட்டுமே நம்பி வாழ்வாதாரத்தை எதிர்நோக்கியிருக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு சூப்பர் திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.. சிறிய அளவில் மற்றும் 100 நாட்டுக்கோழிப் பண்ணை வைத்து தொழிலைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்குத் அரசு தரப்பில் 50% மானியம் வழங்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டமானது, விவசாயிகளின் பேராதரவை பெற்று வருகிறது. அதனால்தான், சேலம் மாவட்டத்தில் தற்போதும் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழகத்தில் விவசாயிகளின் நலனை காக்க பல்வேறு உதவிகளை அரசு செய்து வருகிறது.. அதேபோல, கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களது வசதிக்காகவும், பல்வேறு சிறப்பு திட்டங்களையும் கொண்டு வந்துள்ளது..
குறிப்பாக, சிறிய அளவில் மற்றும் 100 நாட்டுக்கோழிப் பண்ணை வைத்து தொழிலைத் தொடங்கலாம் என்று நினைப்பவர்களுக்குத் தமிழ்நாடு அரசு தரப்பில் 50% மானியம் வழங்கப்படுகிறது. இது கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பயனடையும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது..
கோழிப்பண்ணை திட்டம்
கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள், அலகு) நாட்டுக் கோழிப்பண்ணை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால், எண்ணற்ற விவசாயிகளுக்கு நேரடி பலனை இந்த திட்டம் வழங்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கானோர் பயன்களை பெற்றும் வருகிறார்கள்..
கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்ப்பில் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2022 - 2023ம் நிதியாண்டில் 180 லட்சம் செலவில், சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) 100 நாட்டுக் கோழிப்பண்ணை அலகுகள், 50 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன.
சென்னை, நீலகிரி தவிர்த்து பிற மாவட்டங்களில், நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள விவசாயிகள், கோழிப்பண்ணை அமைக்க, 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம், கால்நடை துறை சார்பில் செயல்படுத்தப்படுகிறது.
முட்டைகள், குஞ்சுகள் விற்பனை
ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக் கோழிக் குஞ்சுகள் அந்தந்த மாவட்ட கால்நடைப் பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. முட்டைகள், குஞ்சுகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமும், வளர்ந்த பெண் கோழிகள் (ம) சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்தும், ஒரு பயனாளி வருடத்திற்கு ரூ.2,31, 000 வரை வருமானமும் ஈட்டப்படுவதால், விவசாயிகளின் வரவேற்பை இந்த திட்டம் பெற்று வருகிறது.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் நாட்டுக்கோழிப் பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு விவசாயிகளுக்காக வெளியாகியிருக்கிறது.. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உள்ளதாவது:
625 சதுர அடி இருக்கா
கால்நடை பராமரிப்புத்துறையின் மூலம் 2025-26ஆம் நிதியாண்டில் நாட்டுக்கோழி வளர்ப்பில் திறன் வாய்ந்த கிராம பயனாளிகளுக்கு சிறிய அளவிலான நாட்டுக்கோழிப்பண்ணை அமைக்க உதவும் திட்டம் செயல்படுத்த மாவட்டம் ஒன்றுக்கு திறமையும் ஆர்வமும் உள்ள 10 பயனாளிகளை தேர்வு செய்து திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தில் பயன் பெற விருப்பமுள்ள பயனாளிகள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராகவும், கோழி கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் கொண்டவராகவும், அந்நிலம் மனித குடியிருப்புகளிலிருந்து விலகியும் இருக்க வேண்டும்.
நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை அமைக்க தேவையான மொத்த செலவில் 50% மானியம் அதிகட்சமாக ரூ.1.65,625/- வரை மாநில அரசால் வழங்கப்படும். ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து 50% மானியத்தில் வழங்கப்படும்.
பழங்குடி இனத்தவர் பயனாளிகள்
விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30% தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
2022-23, 2023-24 மற்றும் 202425 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயன் அடைந்திருக்க கூடாது. 3 ஆண்டு காலம் கோழிப்பண்ணையை பராமரிப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரியபடிவத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications