Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓட்டளிக்க வந்தவருக்கு இப்படியா நடக்கணும்? வாக்குச்சாவடியில் திடீரென மயங்கிய மூதாட்டி.. பெரும் சோகம்

Subscribe to Oneindia Tamil

சேலம்: சேலத்தில் ஓட்டுப்போட வந்த 77 வயது மூதாட்டி திடீரென்று மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. காலை 7 மணி முதல் வாக்காளர்கள் ஆர்வமாக வந்து ஓட்டளித்து வருகின்றனர்.

77 year old woman who came to cast her votes in salem collapsed and died

கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்கு செலுத்தி வருகின்றனர். 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

இந்நிலையில் தான் சேலம் மாவட்டம் செந்தாரப்பட்டியில் உள்ள 250வது வாக்குச்சாவடி மையத்தில் ஓட்டுப்போட இன்று சின்னப்பொண்ணு என்பவர் வந்தார். அப்போது திடீரென்று அவர் ஓட்டுச்சாவடியிலேயே மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் சின்னப்பொண்ணு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஓட்டுப்போட வந்து வாக்குச்சாவடி மையத்தில் மயங்கி விழுந்து இறந்த சின்னப்பொண்ணுக்கு வயது 77 ஆகும். இவரது உயிரிழப்புக்கு என்ன காரணம்? என்பது உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் செந்தாரப்பட்டியில் உள்ள வாக்குச்சாவடியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இன்று வாக்காளர் மாலை 6 மணி வரை ஓட்டுப்போடலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும் கூட ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி பாஸ் புத்தகம் உள்பட 13 ஆவணங்களை காண்பித்து ஓட்டளிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தற்போது வரை அனைத்து தொகுதிகளிலும் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

காலை 11 மணி நிலவரப்படி கள்ளக்குறிச்சி 26.58% திண்டுக்கல் 26.34% நாமக்கல் 26.07% கரூர் 26.07% சேலம் 25.97% விழுப்புரம் 25.69% தருமபுரி 25.66% பெரம்பலூர் 25.62% ஆரணி 25.53% திருப்பூர் 25.47% விருதுநகர் 25.39% ஈரோடு 25.37% சிதம்பரம் 25.35% பொள்ளாச்சி 25.02% தேனி 24.99% தஞ்சாவூர் 24.96% திருவள்ளூர் 24.93 சதவீத ஓட்டு பதிவாகி உள்ளது.

மேலும் திருவண்ணாமலை 24.92% நாகப்பட்டினம் 24.92% கிருஷ்ணகிரி 24.82% மயிலாடுதுறை 24.76% அரக்கோணம் 24.71% திருச்சி 24.7% கன்னியாகுமரி 24.68% வேலூர் 24.67% கடலூர் 24.66% காஞ்சிபுரம் 24.65% தென்காசி 24.51% சிவகங்கை 24.47% தூத்துக்குடி 24.16% நீலகிரி 24.00% ராமநாதபுரம் 23.89% திருநெல்வேலி 23.78% ஸ்ரீபெரும்புதூர் 23.53% மதுரை 22.72% வடசென்னை 22.05% தென் சென்னை 21.97% மத்திய சென்னை 20.09 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+