நீங்கெல்லாம் மனுஷங்க தானா? லட்டு வாங்கித் தர்றேன்.. 6 வயது சிறுமியிடம் அத்துமீறிய 60! ஷாக்கான சேலம்!
சேலம் : தமிழகத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக சேலத்தில் ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 60 வயது முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் வன்கொடுமை சம்பவங்களில் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவது போல் தற்போது தமிழகத்தில் இந்த கொடூரங்கள் அரங்கேறுவது சமூக ஆர்வலர்களையும் பெற்றோர்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஷாக் சம்பவம்
சிறுமிகளை தெரியாதவர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கும் சம்பவத்தார் வெளியே அனுப்ப பெற்றோர் தயங்கி வரும் நிலையில் வீட்டிற்குள் இருக்கும் நபர்களை சிறுமிகளிடம் அத்து மீறுவதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி அந்த வகையிலான ஒரு சம்பவம் தான் சேலம் மாவட்டத்தில் அரங்கேறி இருப்பதோடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்த பகீர் பின்னணி தான் தற்போது வெளியாகியிருக்கிறது.

பாலியல் தொல்லை
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். 60 வயதான இவர் அப்பகுதியில் கூலித் தொழில் செய்து வருகிறார். குடி போதைக்கு அடிமையான இவர் கடந்த சில நாட்களாக வேலைக்குச் செல்லாமல் அப்பகுதியிலேயே குடித்துவிட்டு சுற்றி வந்திருக்கிறார். போதையில் சாலையில் செல்லும் பெண்களை தொந்தரவு செய்வது குடித்துவிட்டு ரகளை செய்வது என அவரது அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்திருக்கிறது. இதனால் அந்த பெருமக்களே கடும் அவதி அடைந்திருக்கின்றனர்.

60 வயது கொடூரன்
இந்நிலையில் தான் அதே பகுதியில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் பெற்றோர் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். பெற்றோர் வேலைக்குச் செல்லும் நிலையில் பள்ளிக்குச் சென்ற அந்த சிறுமி வீட்டில் தனியாக இருப்பது வழக்கம். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோவிந்தராஜ் அந்த சிறுமிக்கு இனிப்புகள் வாங்கித் தருகிறேன் என அடிக்கடி கடைப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். ஒருபுறம் கோவிந்தராஜ் மீது சந்தேகம் கொண்டாலும் அவரது வயது காரணமாக பலர் அவரைக் கண்டு கொள்ளவில்லை. இதனையும் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோவிந்தராஜ் அந்த சிறுமியிடம் அத்துமீறி இருக்கிறார்.

போக்சோவில் கைது
பெற்றோர் இல்லாத நேரத்தில் அந்த சிறுமிக்கு இனிப்புகள் வாங்கித் தருவதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. ஒன்றல்ல இரண்டல்ல இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த கொடுமை நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. சிறுமியின் நடத்தையில் மாற்றம் தெரிவதை உணர்ந்து பெற்றோர் இது குறித்து அவரிடம் விசாரித்த போது தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து விளக்கி இருக்கிறார். இதனால் அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர் கொடூரன் கோவிந்தராஜ் குறித்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் .புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோவிந்தராஜ் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications