பஸ் ஸ்டாண்டில் அலறிய கள்ளக்காதலியின் கணவன்.. பதற வைத்த பைனான்ஸ் அதிபர்.. திடுக்கிடும் தகவல்
சேலம்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த, காதலியின் கணவனை பைனான்ஸ் அதிபர் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூர் ராயர்பாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ்- 52 வயதாகும் இவர் பைனான்ஸ் அதிபர் ஆவார். இவர் அதே பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வம் என்பரை நேற்று இரவு 9.30 மணி அளவில் வீரகனூர் பஸ் நிலையதத்தில் வைத்து சரமாரியாக வெட்டி சாய்த்தார். பின்னர் செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து செல்வத்தை மீட்டு தலைவாசல் அரசு மருத்தவமனைக்க அனுப்பி வைத்தனர். ஆனால் செல்வம் சிகிச்சை பலன் அளிக்காமல் செல்வம் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து செல்வராஜ் மீது கொலை வழக்க பதிவு செய்த தேடி வந்த போலீசார் அவரை கைது செய்தனர். செல்வராஜ் கையில் இருந்த கொலைக்கு பயன்படுத்திய அரிவாளையும் பறிமுதல் செய்தனர். செல்வராஜிடம் ஏன் செல்வத்தை கொன்றாய் என போலீசார் துருவி துருவி விசாரித்தனர்.
அப்போது பல உண்மைகள் வெளிவந்தது. இது தொடர்பாக போலீஸ் அளித்த தகவலின்படி, தலைவாசல் ராயர்பாளையத்தை சேர்ந்த செல்வராஜ், நிதி நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். அதன் மூலம் பலருக்கும் கடன் கொடுக்கும் தொழில் செய்கிறார். பைனான்ஸ் தொழிலுடன் பேன்சி கடையும் நடத்தி வருகிறார். அந்த பேன்சி கடையில் கொலை செய்யப்பட்ட செல்வத்தின் மனைவி சத்யா கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேலை செய்து வந்திருக்கிறார்.
அப்போது செல்வராஜூக்கும், சத்யாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கு இடையே திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது. அடிக்கடி தனிமையில் சந்தித்து சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் ரகசிய உறவு செல்வத்துக்கு தெரிய வந்தது. உடனே அவர் மனைவியை பேன்சி கடைக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்று அறிவித்தார். ஆனாலும் செல்வாஜூக்கும், சத்யாவுக்குமான கள்ளத்தொடர்பு அதிகமாக இருந்துள்ளது. இதனால் செல்வம், வெறுத்து போய் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.
அப்படி பிரிந்த பின்னரும் செல்வராஜ், தன்னுடைய கள்ளக்காதலி சத்யாவை ரகசியமாக சந்தித்து பேசி வந்துள்ளார். இதனிடையே செல்வம், இவர்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக வந்து சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் செல்வத்தை தீர்த்துக்கட்ட செல்வராஜ் முடிவு செய்தார் அதன்படியே வீரகனூர் பஸ் நிலையத்துக்கு பின்புறம் செல்வம் செல்வதை பார்த்து, அவரிடம் வேண்டுமென்றே தகராறு செய்து தீர்த்துக்கட்டி உள்ளார்.இந்த தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
பைனான்ஸ் அதிபர் செல்வராஜ் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்திருக்கிறார். இதில் 2-வது மனைவியை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டிக் கொலை செய்திருக்கிறார் என்பதும், -வதாக செல்வத்தின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து செல்வம் கொலையில் அவரது மனைவி சத்யாவுக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications