17 வயது மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு.. சேலம் மத்திய சிறையில் தூக்கில் தொங்கிய அசோக்குமார்
சேலம்: சேலத்தில் 17 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட விசாரணைக் கைதி மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தில் மனு செய்ததாகவும் ஆனால் ஜாமீன் கிடைக்காத நிலையில், அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார். சேலத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணியாற்றி வந்தார் அசோக்குமார்.

ஜூன் மாதம் கைது
அசோக்குமார், 17 வயது பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

சிறையில் அடைப்பு
சேலம் அம்மாபேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அசோக்குமார் மீது விசாரணை நடந்தது. விசாரணைக்கு பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 8 மாதங்களாக இவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.

ஜாமீன் கிடைக்காத விரக்தி
அசோக்குமார் ஜாமீன் கேட்டு நீதி மன்றத்தின் மனு செய்திருக்கிறார். ஆனால் ஜாமீன் கிடைக்காத நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வர உள்ளது. இந்த நிலையில் சிறையிலேயே அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஜாமீன் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

பிரேதம் அனுப்பிவைப்பு
அசோக்குமாரின் சடலத்தை மீட்ட சிறைத்துறை காவலர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மத்திய சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்தும் அஸ்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications