திமுகவில் இணைந்த விஜய் ஃப்ரெண்ட்.. காமெடி நடிகர் பெஞ்சமின் தேர்தல் பிரச்சாரத்தால் ஈடுபட தயாராம்!
சேலம்: லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பிரபல நடிகர் பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார். இவர், அண்மையில் கட்சி தொடங்கியுள்ள விஜய்யுடன் 'திருப்பாச்சி' படத்தில் அவரது நண்பனாக நடித்தவர்.
சேலத்தைச் சேர்ந்தவர் நடிகர் பெஞ்சமின். இவர் பகவதி, சாமி, அன்பே சிவம், திருப்பாச்சி, ஆட்டோகிராஃப், ஐயா, திருப்பதி, வசூல்ராஜா எம்பிபிஎஸ், உள்ளிட்ட ஏராளமான படங்களில் கவனிக்கத்தக்க பாத்திரங்களில் நடித்துள்ளார். 'திருப்பாச்சி' படத்தில் விஜய்யின் நண்பனாக நடித்திருந்தார் பெஞ்சமின். 'வெற்றிக்கொடி கட்டு' படத்தின் மூலம் அறிமுகமான பெஞ்சமின், வடிவேலுவோடு ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் பெஞ்சமின், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான ராஜேந்திரன் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். பெஞ்சமினுக்கு, திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் சால்வை அணிவித்து, கட்சிக்கு வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். திமுகவில் இணைந்தது பற்றிப் பேசியுள்ள நடிகர் பெஞ்சமின்,'மக்களுக்காக பல்வேறு நலத் திட்டங்களை திமுக அரசு செய்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலக துணை நடிகர்கள் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு, வறுமையில் சிகிச்சைக்குக் கூட வழியின்றித் தவித்தபோது, அவர்களுக்கு உதவி கோரி வீடியோக்களை வெளியிட்டிருந்தார் பெஞ்சமின். அதன் மூலம் ஏராளமான நடிகர்களின் உதவியைப் பெற்று, நலிந்த கலைஞர்களின் மருத்துவ சிகிச்சைக்காக உதவியுள்ளார்.
நலிந்த, வறுமையில் வாடும் துணை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் நலனுக்காக தமிழ் நடிகர்கள் பாதுகாப்பு அறக்கட்டளை என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றை அண்மையில் தொண்டங்கினார் நடிகர் பெஞ்சமின். இந்த அறக்கட்டளை மூலம், நலிந்த திரைக் கலைஞர்களின் உடல் நல்லடக்கத்தை ஏற்று நடத்துவதோடு, அவர்களின் குழந்தைகளின் கல்விக்காகவும் உதவத் தொடங்கியுள்ளார் பெஞ்சமின்.
இந்நிலையில், அவர், திமுகவில் இணைந்துள்ளார். சேலம் மாவட்டத்தின் ஓமலூர் ஒன்றியத்தில் ஏராளமான மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணைந்த நிகழ்வின்போது, நடிகர் பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார். அண்மையில் நடிகர் விஜய், 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கிய நிலையில், விஜய்க்கு நண்பராக நடித்த பெஞ்சமின் திமுகவில் இணைந்துள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications