விஜய் அரசியலுக்கு வந்தால் காணாமல் போய்விடுவார்! ரசிகர்களை சீண்டிய நடிகையின் கணவர்!
சேலம்: சினிமாகாரர்களால் அரசியலில் ஜெயிக்கவே முடியாது என்றும் எல்லோரும் தன்னை எம்.ஜி.ஆராக நினைத்துக் கொண்டு அரசியலுக்கு வந்தால் இப்போதைய சூழலில் வெற்றிபெறவே முடியாது எனவும் நடிகை தேவயாணியின் கணவரும், இயக்குநருமான ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
அரசியல் பற்றி தாம் பேச விரும்பாவிட்டாலும் செய்தியாளர்கள் அது குறித்து கேள்வி எழுப்பி பேச வைத்து விட்டீர்கள் என்றும் எல்லா தரப்பினரும் சினிமா பார்க்க வருவதால் சினிமாகாரர்கள் வெற்றிபெறுக்றோம் என்றும் இதே ஒரு அரசியல் கட்சி தொடங்கிவிட்டால் அந்த குறிப்பிட்ட கட்சிக்காரர்கள் மட்டுமே படம் பார்க்க வருவார்கள் மற்றவர்கள் வரமாட்டார்கள் எனக் கூறினார்.

இதனால் விஜய் அரசியலுக்கு வந்தால் காணாமல் போய்விடுவார் என சூசகமாக கூறி அவரது ரசிகர்களை சீண்டியுள்ளார் இயக்குநர் ராஜகுமாரன். மேலும், திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்ற எண்ணம் முதலில் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் வர வேண்டும் என்றும் அரசு சொல்கிறதே என்பதற்காக இல்லாம இயல்பாகவே அந்த எண்ணம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்றார்.
அரசியல் என்பது கடல் என்றும் சினிமா என்பது ஆறு எனவும் கூறிய இயக்குநர் ராஜகுமாரன், ஆற்றில் மீன் பிடிப்பதை போல் கடலில் மீன் பிடித்துவிடலாம் என நினைக்கக் கூடாது என்றார். மேலும், அரசியலுக்கு வந்தால் தான் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கக் கூடாது என்றும் பொருளாதார ரீதியாக வலுவாக இருக்கும் எவர் வேண்டுமானாலும் அரசியலுக்கு வராமலேயே மக்கள் நலப் பணிகளை செய்யலாம் எனத் தெரிவித்தார்.

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். இதனிடையே தனது பிரஸ்மீட்டின் போது தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்தவர் கருணாநிதி என்றும் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டதாகவும் வேதனை பகிர்ந்தார்.












Click it and Unblock the Notifications