சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நடிகை கஸ்தூரி! ஏன், எதற்காக இந்த சந்திப்பு?
சேலம்: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேற்று மாலை எடப்பாடி பழனிசாமியை நடிகை கஸ்தூரி சந்தித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த ஊரில் முன்னாள் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அங்கு அவரை அரசியல் கட்சியினர் சந்தித்தும் வருகிறார்கள்.

கூட்டணி உடன்பாடு, தொகுதி பங்கீடு என அரசியல் கட்சிகள் பிஸியாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் திமுக தனக்கான கூட்டணியையும் பாஜக தனக்கான கூட்டணியையும் அமைத்துவிட்ட போதிலும் அதிமுக இன்னும் எந்த இறுதியையும் செய்யவில்லை.
அதிமுகவுடன் பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்த நேரத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் யுவராஜா, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் நேற்று மதியம் 2 பாஜக எம்எல்ஏக்கள் சேலத்தில் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைய போவதாக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் அறிவித்திருந்தார். ஆனால் நேற்று அந்த நேரத்திற்கு யாரும் அப்படி அதிமுகவில் இணையவில்லை. ஆனால் மாலை 5.45 மணிக்கு சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியை நடிகை கஸ்தூரி நேரில் சந்தித்து பேசினார்.
இதைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இந்த சந்திப்பின் போது இருவரும் அரசியல் பேசினார்களா, இல்லையா என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. அது போல் கோவை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியையும் அவர் சந்தித்து பேசியிருந்தார்.
பாஜக ஆதரவு நடிகை என விமர்சிக்கப்படும் நடிகை கஸ்தூரி சமூக நலம் சார்ந்த கருத்துகளை பொது வெளியில் விவாதிப்பது வழக்கம். இந்த நிலையில் இவர் எதற்காக எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்தார் என்பது தெரியவில்லை.
-
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
ஸ்டாலின் அதிரடி மாற்றம்.. இனி இவங்க யாருமே வேண்டாம்.. கொத்தாக தூக்கப்படும் பெரிய மீன்கள்! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
திமுக கூட்டணி தற்போது இல்லை.. 3 மாதம் கூட தவெக ஆட்சி தாங்காது என்பதா? கொந்தளித்த சிபிஎம் சண்முகம் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications