கருணாநிதியே பாராட்டியவர்! எடப்பாடி கோட்டையில் கொடி நடும் ராமச்சந்திரன்.. யார் இந்த சேலம் மேயர்?
சேலம்: சேலம் மாநகராட்சியின் 5 வது மேயராக திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் பதவி ஏற்க இருக்கிறார். திமுகவில் மிக நீண்ட பாரம்பரியம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அனைத்து மாநகராட்சிகளையும் வென்றது. இந்த மாநகராட்சிகளுக்கான மேயர், துணை மேயர் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்பை தற்போது திமுக வெளியிட்டு உள்ளது. நாளை மறைமுக தேர்தல் நடக்க உள்ள நிலையில் மேயர், துணை மேயர்களாக தேர்வு செய்யப்பட உள்ளவர்களின் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.
இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றியில் குறிப்பிடத்தக்கது என்றால் அங்கு கொங்கு மண்டல வெற்றிதான். கொங்கு மண்டலம் முழுக்க இந்த திமுக வசம் ஆகியுள்ளது.

சேலம்
கோவை, சேலம், திருப்பூர், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்கள் அனைத்திலும் திமுகதான் வெற்றிபெற்றுள்ளது. சேலத்தில் உள்ள 60 வார்டுகளில் 47 வார்டுகளில் திமுக தனியாக வெற்றிபெற்றது. அதேபோல் அதிமுக 7 வார்டுகளில் வென்றது. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சியில் திமுக மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் நெடுஞ்சாலை நகர் வார்டில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

சேலம் மாநகராட்சி
இந்த நிலையில் சேலம் மாநகராட்சியின் 5 வது மேயராக திமுகவை சேர்ந்த ராமச்சந்திரன் பதவி ஏற்க இருக்கிறார். இவர் 1944ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பிறந்தவர். தன் சிறுவயது முதலே இவருக்கு அரசியல் மீது பற்று இருந்தது. இந்த நிலையில் 1961 ஆம் ஆண்டு அண்ணாதுரை அவர்கள் காலகட்டத்தில் அண்ணா மீது இருந்த ஈர்ப்பின் மூலம் திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். தொடர்ந்து அவர் திராவிட இயக்கத்தின் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வந்தார். பின்பு தனது முழு நேர அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.

சென்னை வந்தார்
இந்த நிலையில் அரசியல் ரீதியாக இவருக்கும் சென்னை மாநகரம் புரசைவாக்கத்தில் சேர்ந்த சிட்டி பாபுவிற்கும் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதனையடுத்து ராமச்சந்திரன் தொழில் நிமிர்த்தமாக சென்னை மாநகரம் சென்றார். அங்கு 3 ஆண்டு காலம் தங்கியிருந்து தொழிலை நடத்திவந்தார். அப்போது தேர்தல் காலம் என்பதால் திராவிட கழகத்தின் கொடி கம்பத்தை உடனடியாக பல்வேறு இடங்களில் அமைக்க வேண்டும் என மறைந்த முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அப்போது புரசைவாக்கத்தில் சிட்டிபாபுவுடன் இணைந்து ராமச்சந்திரன் அங்கு கொடி நாட்டார். இதற்கான செலவையும் அவரே ஏற்றுக்கொண்டார்.

கருணாநிதி பாராட்டு
இதன் மூலம் கருணாநிதிக்கு அறிமுகம் ஆனவர்.. அவருடன் நெருக்கமும் ஆனார். முதல் சந்திப்பிலேயே இவரை கருணாநிதி உங்களது கழக செயல்பாடுகளும் ஆற்றலும் மிகவும் நன்றாக உள்ளது என பாராட்டி வாழ்த்து கூறினார். பின்னர் வேறு ஒரு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அவரிடமும் நெருக்கம் ஆனார். அதன்பின் மீண்டும் சேலம் வந்தவர் மாவட்ட பிரதிநிதி, அஸ்தம்பட்டி பகுதி பொருளாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார் இதுதவிர ஆரம்ப காலத்திலிருந்து இன்று வரை திராவிட கழகம் நடத்தும் அனைத்து போராட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட ராமச்சந்திரன் அதற்காக பலமுறை கைதாகியுள்ளார்.

பலமுறை கைது
இதெல்லாம் ஒருபுறமிருக்க தமிழகத்தின் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் எந்தப் பகுதியில் இடைத்தேர்தல் நடந்தாலும் அங்கு சென்று திராவிட முன்னேற்ற கழகத்திற்கான களப்பணியில் ஈடுபடுவார். 60 ஆண்டுகளாக இவர் திமுகவில் முக்கியமான உறுப்பினராக இருக்கிறார். தற்போது 77 வயதில் இவர் சேலம் மேயராக தேர்வாகி இருக்கிறார். சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான இரா.ராஜேந்திரனுக்கு நெருக்கமானவர் என்பதால் இவருக்கு இந்த வாய்ப்பும் பிரச்சனை இன்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய்யை கணிக்கல.. முதுகில் குத்திருக்காங்க.. திமுக தோல்விக்கு காரணம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
சொந்த கட்சிக்கு எதிராக சீறிய சென்னை மாநகராட்சி கவுனசிலர் மணிகண்டன்.. பின்னணியில் தவெக? -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications