7 முறை போட்டி.. 5 முறை வெற்றி! சொந்த தொகுதியில் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் கிராப் என்ன!

Subscribe to Oneindia Tamil

சேலம்: தமிழக அரசியலில் இன்று முக்கிய அரசியல் தலைவராகச் சக்தியாக உருவெடுத்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, அரசியல் முகவரி கொடுத்தது அவரது சொந்தத் தொகுதியான எடப்பாடி. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பெர்பாமன்ஸ் என்ன.. அங்கு அவரது சாதனைகள் என்ன என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

எடப்பாடி தொகுதி சுதந்திரத்திற்கு நடந்த முதல் தேர்தலுக்காக 1952ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.. விவசாயமும் விசைத்தறியும் இரு கண்களாகக் கொண்ட சேலம் மாவட்டத்தின் முக்கியத் தொகுதி எடப்பாடி. அந்தத் தொகுதியில் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் கிராப்.. 1989 முதல் 2021 வரை அவர் சந்தித்த ஏற்ற இறக்கங்கள் குறித்து நாம் பார்க்கலாம்!

tamil nadu assembly election 2026 Edappadi AIADMK

முதல் வெற்றி

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக 'ஜெ' அணி, 'ஜானகி' அணி என இரண்டாகப் பிரிந்திருந்த நேரம். 1989 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணியில் எடப்பாடி பழனிசாமிக்கு சீட் கிடைத்தது. அவர் துணிச்சலாக இறங்கி வேலை பார்த்தார். இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்ட நிலையிலும், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1989 தேர்தலில் எடப்பாடிக்கு முதல் வெற்றி.. அப்போது அதிமுக (ஜெ) அணிக்கு "சேவல்" சின்னத்தில் போட்டியிட்ட இபிஎஸ், சுமார் 30,000 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளரை சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எடப்பாடி பழனிசாமியை முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குள் அழைத்து வந்த தேர்தல் இது.

தொடர்ந்து 1991 தேர்தலிலும் அவர் வென்றார். அந்த தேர்தலில் ஜெயலலிதா - காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்த நிலையில், இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட இபிஎஸ் கலக்கல் வெற்றியைப் பெற்றார். அந்தத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி சுமார் 41 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் பாமக 2வது இடம் பிடித்த நிலையில், திமுக வேட்பாளர் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.

அரசியல் வாழ்வில் சரிவு

அரசியல் வாழ்வின் ஏறுமுகத்தில் இருந்த இ.பி.எஸ்-க்கு 1996 மற்றும் 2006 தேர்தல்கள் அவ்வளவு சிறப்பாக இல்லை. 1996 தேர்தலில் இபிஎஸ் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டார். அப்போது ஜெயலலிதாவுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு அலை வீசிய நிலையில், பாமகவின் கணேசன் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டார். இருப்பினும், அந்த தேர்தலில் எடப்பாடி கணிசமான வாக்குகளையே பெற்றிருந்தார். 2001ல் அதிமுக- பாமக கூட்டணி அமைத்த நிலையில், இத்தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டதால், இ.பி.எஸ் போட்டியிடவில்லை.

2006ல் மீண்டும் எடப்பாடி போட்டியிட்ட போதிலும் அவரால் வெற்றி பெற முடியவில்லை. திமுக கூட்டணியில் களமிறங்கிய பாமகவின் காவேரியிடம் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் (சுமார் 6,300) தோல்வியடைந்தார். ஆனால் இந்த தேர்தலுக்கு பிறகே எடப்பாடியின் எழுச்சி ஆரம்பமானது. 2011-க்குப் பிறகு எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் அசைக்க முடியாத சக்தியாக மாறினார். 2011 தேர்தலில் பாமகவின் கார்த்தேவை 34,738 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த வெற்றிக்காக அவருக்கு அமைச்சர் பதவியையும் கொடுத்தார் ஜெயலலிதா.

கம்பேக்

2016ல் திமுகவின் அர்ஜுனனை 42,022 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இந்த தேர்தல் முடிவுகள் வந்த பிறகு நடந்த அரசியல் டிராமா அனைவருக்கும் தெரியும். ஜெயலலிதா மறைவு மற்றும் ஓபிஎஸ் தர்ம யுத்தத்திற்குப் பிறகு எடப்பாடி 2017 பிப்ரவரி மாதம் முதல்வராகப் பதவியேற்றார். 2021ல் முதல்வராகத் தேர்தலைச் சந்தித்த இபிஎஸ், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவின் சம்பத்குமாரை 93,802 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தனது அரசியல் வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

அசைக்க முடியாத சக்தி

7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றி என்பது சாதாரண விஷயமல்ல. 1990களில் பாமக வசம் போன எடப்பாடி தொகுதியை, தனது கள அரசியல் மூலம் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாக மாற்றியிருக்கிறார் இபிஎஸ். இவரது வெற்றிகளில் இரட்டை இலை சின்னம் மற்றும் ஜெயலலிதாவின் இமேஜ் முக்கியமானது என்றாலும் அதைத் தாண்டி இறங்கி வேலை செய்ததால் மட்டுமே ஹாட்டிரிக் வெற்றியை இவரால் பெற முடிந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+